சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பல்ப்" வாங்கின பாஜக.. எடப்பாடிக்கு "3 கட்சிகள்" ஆதரவு.. மேலிடமே எதிர்பார்க்கல.. மூழ்குகிறதா தாமரை?

புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடல் கூட்டணி வைக்க உள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் அறிவித்து கொண்டிருந்தால், பாஜக தலைமையிலான கூட்டணி ஒன்று சைலண்ட்டாக ரெடியாகி கொண்டிருக்கிறதாம்.. இதுகுறித்த தகவல் ஒன்றுதான் அரசியல் களத்தில் சுற்றி கொண்டிருக்கிறது..

இன்றைய தினம் அதிமுக கூட்டத்தினை, பாஜக, ஓபிஎஸ் தரப்பு உட்பட பல்வேறு கட்சிகளும் உற்றுநோக்கி உள்ளன.. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியே தமிழகத்தில் அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.

அப்படியானால், பாஜக இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறாரா? என்ற சந்தேகம் இன்றைய தினம் மீண்டும் எழுந்துள்ளது.. ஏற்கனவே ஒருமுறை நாமக்கல்லில் மெகா கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்..

என்னது.. பாஜக நம்மை கண்ட்ரோல் பண்ணுதா? சட்டென டோனை மாற்றி பேசிய எடப்பாடி.. மிரண்டு போன மா. செக்கள்! என்னது.. பாஜக நம்மை கண்ட்ரோல் பண்ணுதா? சட்டென டோனை மாற்றி பேசிய எடப்பாடி.. மிரண்டு போன மா. செக்கள்!

 மெஜாரிட்டி

மெஜாரிட்டி

அந்த சமயம், அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் மெகா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு அண்ணாமலை சிறிது நேரம் யோசித்தவர், "விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்'" என்று மட்டும் பதிலளித்திருந்தார்.. அதேபோல, அதிமுக என்பது மிகப்பெரிய கட்சி, அந்த கட்சியில்தான் நாங்கள் இன்னமும் கூட்டணியில் உள்ளோம் என்பதையும் அடிக்கடி வலியுறுத்தியவாறே வருகிறார்... இதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமியிடம் 95 சதவீதம் நிர்வாகிகள் ஆதரவு இருக்கும் நிலையில், அதிமுகவின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்பதே மேலிட பாஜக எண்ணமாக உள்ளது.

 துணியும் பாஜக

துணியும் பாஜக

அதேசமயம், பாஜக அல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார் என்பதையும், கமலாலயம் அறியாமல் இல்லை.. எனவேதான், எடப்பாடி பழனிசாமி இல்லாத கூட்டணிக்கும், பாஜக தயாராகியே வருகிறது என்ற தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.. தங்கள் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைப்பு தராவிட்டால், அவரை கழட்டிவிட்டு, மற்றவர்களை ஒன்றிணைத்து தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கவும், பாஜக துணியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

தற்சமயம், ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் போன்றோர் தங்கள் தரப்பில் உறுதியாக உள்ள நிலையில், பாமகவும், தேமுதிகவும் தங்கள் பக்கம் நிச்சயம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பாஜக மேலிடத்துக்கு இருக்கவே செய்கிறது.. எடப்பாடி இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டுமானால், இந்த பலம் போதாது என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது.. அதனாலேயே, சில கட்சிகளை நேடியாகவே தொடர்பு கொண்டு பேசியதாம்.. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள் இருக்கின்றன...

 நிராகரிப்பு

நிராகரிப்பு

அந்த கட்சிகளின் தலைவர்களை அண்மையில் தொடர்புகொண்டிருக்கிறது பாஜக தலைமை. அப்போது, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். நீங்கள் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கட்சிகளின் தலைவர்களோ, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி பாஜகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்களாம்.. இந்த நிராகரிப்பு குறித்து பாஜகவின் தேசிய தலைமைக்கு சொல்லப்பட்டுள்ள நிலையில், அதைக்கேட்டு அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

 புதிய தமிழகம்

புதிய தமிழகம்

காரணம், புதிய தமிழகம் கட்சியை பொறுத்தவரை, கிருஷ்ணசாமி எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக உள்ளார்.. சமீபத்தில் நடந்த புதிய தமிழகம் மாநாட்டில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது புகழ்தான் மாநாட்டில் ஒலித்து கொண்டேயிருந்தது.. அதாவது, தமிழகத்தில் என்றைக்கும் தேர்தல் நடைபெற்றாலும் மீண்டும் செயின்ட் சார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமிதான், முதலமைச்சர் என்று நாட்டு மக்கள் மனதில் வைத்துள்ளார்கள் என்றே புதிய தமிழகம் மாநாட்டில் பேசப்பட்டது.. எனவேதான், பாஜகவின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

 வாசன் நேசம்

வாசன் நேசம்

புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை, ஏசி சண்முகம் எப்போதுமே கூட்டணியில் பிரச்சனை தராதவர். கடந்த முறை தேர்தலிலேயே 'கொடுக்குறதை கொடுங்க... இரட்டை இலையிலேயே நிற்கிறோம்' என்று ஓபனாக சொல்லியவர் ஏ.சி. சண்முகம்.. எனவே, எடப்பாடியை தவிர்த்துவிட்டு, பாஜக பக்கம் செல்வாரா? என்ற கேள்வியும் எழுகிறது.. அதேபோல, தமிழ்மாநில காங்கிரஸை பொறுத்தவரை, வாசன் அனைவருக்குமே பிடித்தமான தலைவர்.. கட்சிக்கு அப்பாற்பட்டு, விஜயகாந்த்தை போல அனைவராலும் விரும்பப்படுபவர்.. பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கும் நிலையில், வாசனை மட்டும் எப்படியாவது உள்ளே இழுத்து போட பாஜக முயன்று வருவதாக தெரிகிறது. ஆக, எடப்பாடி அல்லாத பாஜக கூட்டணி என்பதும், அந்த கூட்டணி வெற்றிபெறும் என்பதும் கொஞ்சம் டவுட்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

English summary
Do you know why Dr Krishnasamy supports Edappadi and What will AC Shanmugam decide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X