• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை சிக்னல்?".. லேசில் விட்டுட முடியாதே.. சைஸா கணக்கு போடும் பாஜக.. நைஸா காய் நகர்த்தும் எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் விரைவில் டெல்லிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அத்துடன் இந்த விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு தற்சமயம் என்னவாக உள்ளது என்ற கேள்வியும் வட்டமடிக்கிறது.

தமிழகத்தில் 10 எம்பி சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.. அதற்காகவே அதிமுகவின் இணக்கத்தை விரும்புகிறது..

கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாத நிலையில், தற்சமயம், இவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அவங்க எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. திருமாவுக்கு கேசிஆர் கொடுத்த 'மெசேஜ்’.. உற்று நோக்கும் கட்சிகள்! அவங்க எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. திருமாவுக்கு கேசிஆர் கொடுத்த 'மெசேஜ்’.. உற்று நோக்கும் கட்சிகள்!

அமித்ஷா ப்ளான்

அமித்ஷா ப்ளான்

அதற்கேற்றபடி ஓபிஎஸ் டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும், விரைவில் பிரதமர், அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.. ஓபிஎஸ் எதற்காக டெல்லி செல்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் அநேகமாக, கட்சி விவகாரங்கள் குறித்தும், அழைப்பு விடுத்தும், ஒன்றுசேர எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார் என்றும் புகார்களை மேலிடத்தில் சொல்லலாம் என்று தெரிகிறது.

ஸ்பீடு எடப்பாடி

ஸ்பீடு எடப்பாடி

அப்படியானால், பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுப்பார்கள்? எடப்பாடியிடம் பேச்சு நடத்துவார்களா? ஒன்றிணையும்படி மறைமுக அழுத்தம் தருவார்களா? அல்லது ஓபிஎஸ்ஸை அழைத்து பேசுவதையே தவிர்ப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அரசியல் நோக்கர்கள் வேறு சில முக்கிய கருத்துக்களை இதுதொடர்பாக முன்வைக்கிறார்கள்.. எவ்வளவுதான் ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் உச்சக்கட்டமாக தகராறு செய்துகொண்டாலும்கூட, எடப்பாடி பழனிசாமியை மட்டும் பாஜக தலைவர்கள் அவ்வளவு எளிதாக ஒதுக்கி தள்ளிவிட மாட்டார்கள் என்கிறார்கள்.

அஸ்திரம் 1

அஸ்திரம் 1

இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.. "தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக முதலில் களத்தில் உள்ளது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான்.. அதிலும் விசிகவின் பங்கை மறுத்துவிட முடியாது.. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக கூட்டணியை பலப்படுத்தினார் திருமாவளவன்.. மேலும் தானே முன்னின்று, ஓடிஓடிச்சென்று ஒவ்வொரு கட்சியாக பேசி ஆதரவையும் திரட்டினார்.. எனவே விசிகவாகட்டும், இடதுசாரிகளாகட்டும், பாஜகவை கடுமையாக குற்றஞ்சாட்டி வருவதுடன் திமுகவுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன.. அந்தவகையில், பாஜகவுக்கு ஓட்டு வங்கி செல்லாதபடி பார்த்து கொள்ளும்.

அஸ்திரம் 2

அஸ்திரம் 2

அதேபோல, சீமானும் வழக்கம்போலவே இந்த முறையும் பாஜக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிப்பார்.. அவரது அரசியல் தற்போது வேறுவிதமாக திரும்பி உள்ளது.. தலித் + சிறுபான்மை ஓட்டுக்களை குறிப்பிட்ட அளவுக்கு இந்த முறை பெறுவார்.. அதிலும் பஞ்சமி நில விவகாரங்களை வேறு தலைவர்கள் யாருமே எடுக்காமல், சீமான்தான் தற்போது தோண்டி எடுத்து வருவதால், அவரது அரசியலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே, சீமானுக்கு இந்த முறை ஓட்டுவங்கி கூடலாம்.

அஸ்திரம் 3

அஸ்திரம் 3

எனினும், திமுகவுக்கு அடுத்தபடியாகத்தான் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தில் பொருத்தி பார்க்கிறது டெல்லி பாஜக.. தனக்கான ஓட்டு வங்கியை எப்படியும் பெறக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி.. காரணம், அவருக்கு சாதி பலம், பணபலம், மெஜாரிட்டி ஆதரவுகள் என கட்சியில் அனைத்துமே சாதகமாக உள்ள நிலையில், நிச்சயம் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை ஓபிஎஸ் இல்லாமலேயே தனித்து நின்றாலே பெறக்கூடும்.. ஒருவேளை, இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டால், அதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, மக்களிடம் அனுதாபத்தை தேடி, வாக்குகளை பெறும் யுக்தியும் எடப்பாடியும் உள்ளது..

வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

திமுக + சீமான் வாக்குகளை பிரிக்கும் சூழலில், கை கொடுப்பது எடப்பாடி அதிமுக ஓட்டுக்கள்தான் என்பதை பாஜக நன்கு அறிந்து வைத்துள்ளது.. அதனால், எடப்பாடியை சமாதானம் செய்தால் மட்டும்போதும், மொத்த அதிமுக வாக்கு வங்கியையும் கூட்டணி பக்கம் திருப்பி விடலாம் என்பதுதான் பாஜக கணக்கு.. அதனால், ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்துகிறதோ இல்லையோ, எடப்பாடியை நிச்சயம் சமாதானப்படுத்தும் அல்லது அவரது பிடிவாதத்தை தளர்த்த வேறு ஏதாவது ரூட்டை பாஜக கையில் எடுக்குமே தவிர, எடப்பாடியை கழட்டிவிடாது.. இதை எடப்பாடியும் நன்றாகவே உணர்ந்துள்ளார்' என்கிறார்கள்.

English summary
Does BJP DO politics against Edappadi palanisamy and When is O Panneerselvam going to Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X