டரியல் பாஜக.. திமுகவுக்கு மாற்று அதிமுகதான்.. சொல்லி அடித்த ரிசல்ட்.. மலராமலே "கருகிய" தாமரை
பாஜக தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியவில்லை
சென்னை: கோட்டையில் எங்கள் காவி கொடி பறக்கும் என்று சட்டசபை தேர்தலின்போது, அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இன்றைய உள்ளாட்சி தேர்தலிலேயே அக்கட்சியின் பலம் என்னவென்று உணர்ந்திருக்கும்.. முதல்முறையாக தனித்து போட்டியிட்ட பாஜக குறிப்பிடத்தகுந்த இடத்தை கூட வெல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
எப்போது தேர்தல் வந்தாலும், முதல் நபராக கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிவிடும் பாஜக.. அதேசமயம், நாங்கள் தனித்து நின்றாலே வெற்றி பெற்றுவிடுவோம் என்பதை தவறாமலும் சொல்லிவிடும்..
கடைசியில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அக்கட்சி தரும் சீட்களை பெற்றுக் கொண்டு போட்டியிட்டுவிடும். இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை..

அண்ணாமலை
பேச்சுவார்த்தையில் உடன்பாடு வழக்கம்போல் எட்டப்படாமல் இருந்தாலும், நயினார் பேசிய பேச்சினை அதிமுக தலைவர்களும் சரி, தொண்டர்களும் சரி, இன்னும் மறக்கவில்லை.. தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் தந்தும், அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டும்கூட, அதிமுகவின் கோபம் தணியவில்லை.. இதை உணர்ந்துதான், வேறு விழயில்லாமல் தனித்து பாஜக களமிறங்கும் சூழலுக்கு ஆளானது.

துணிச்சல்
தனித்துபோட்டி என்ற பாஜகவின் துணிச்சல் முடிவு ஏற்படையதே என்றாலும் இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு சாத்தியக்கூறுகளை பெற்றது என்ற ஆவலை தேர்தல் களத்தில் ஏற்படுத்தி வந்தது.. காரணம், இதுவரை இல்லாத அளவிற்கு 11 முனை போட்டி நிலவும் வகையில் தேர்தல் களம் நிலவியது.. எப்படியும் வாக்குகள் அனைத்தும் பிரியவே செய்யும் என்றும் கணிக்கப்பட்டது.. அதிலும் அதிமுக, திமுகவுக்கு போக, மிச்சம் மீதிதான் மற்ற கட்சிகளுக்கு வந்து சேரும் என்பதை பாஜகவும் உணராமல் இல்லை.

ஒரே நம்பிக்கை
இருந்தாலும் ஒரே நம்பிக்கை, தமிழகத்திலேயே ஓரளவு ஆதரவுள்ள கொங்கு மண்டலம் தங்களை விட்டுவிடாது என்று நம்பியது.. கோவை, சென்னை மேயர் இடங்களை அதிமுகவிடம் கேட்டுப்பார்த்தும், எடப்பாடி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அதனால்தான் கோவையை மட்டுமே பிரதானமாக நம்பி களமிறங்கியது.. ஆனால், கோவையில் பலம்பொருந்திய வேலுமணியே திமுகவிடம் திணறிவிட்டதை பார்த்து பாஜக சற்று மிரண்டுதான் போனது.

திமுக
கோவையை அதிமுக திமுகவிடம் பறிகொடுத்துள்ளது.. அதிமுகவை சாதி கூட காப்பாற்ற வரவில்லை.. அதாவது அதிமுக தோற்றது வேலுமணியின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.. திமுக வென்றது, செந்தில்பாலாஜியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.. இதற்கு நடுவில் பாஜகவின் தடம்கூட தெரியாமல் மறைந்துபோனதுதான் சோகமே.. இத்தனைக்கும் மாநகராட்சிகளில் தனித்தனி குழுக்கள் உருவாக்கப்பட்டு, புது புது யுக்திகளையும் கையில் எடுத்தது..

சீனியர்கள்
கோவை, ஈரோடு மாநகராட்சிகளில் கிறிஸ்துவர், இஸ்லாமியர்களும் வேட்பாளராக நிறுத்தியது.. பொன். ராதாகிருஷ்ணன். எச்.ராஜா, குஷ்பு, போன்ற சீனியர்களும் பிரச்சாரம் செய்தனர்.. ஒரு பக்கம் பணப்பட்டுவாடாவை எதிர்த்தாலும், மறுபக்கம் செல்வாக்கான பாஜக வேட்பாளர்கள் கழகங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வைட்டமின்களை இறக்கவே செய்தனர்.. எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக களப்பணி நடந்து கொண்டுதானிருந்தது.

அண்ணாமலை
குறைந்தது 4-5 வார்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக இருந்தது.. கோவையில் கணிசமாக உள்ள வட இந்தியர்களின் வாக்குகளும், அப்படியே கிடைக்கும் என்று மலை போல நம்பப்பட்டது.. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் திமுகவுக்கு அடுத்தப்படியாக 2வது இடத்தை பாஜகவால் பெற முடிந்துள்ளது.. குழித்துறை, உதகை, திண்டுக்கல் போன்ற இடங்களில் சில இடங்களை தக்க வைக்க முடிந்தது.

பாஜக
ஆனால், தங்களுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது என்று கருதப்பட்ட கோவையே கவிழ்த்துவிட்ட நிலையில், இனி பாஜகவை போட்டியாக எந்த கட்சியும் கருதப்பட முடியாது.. அதேபோல, பாஜக மட்டுமே திமுகவுக்கு மாற்று என்றெல்லாம் இத்தனை நாட்களும் அண்ணாமலை சொல்லி கொண்டிருந்ததை இனி சொல்ல முடியாது.. தனித்து போட்டி என்பது அண்ணாமலையின் ஆசை மட்டுமே இப்போது நிறைவேறி உள்ளதே தவிர, திமுகவுக்கு சரிக்கு சமமான இடத்தில் அக்கட்சி வளரவில்லை என்பதையே இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகிறது.

இந்துத்துவா
அப்படியானால், பாஜக சறுக்கி கொண்டு போக என்ன காரணம்? பாஜகவின் இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் இன்றுவரை ஏற்கவில்லை என்பதும், மத்திய பாஜக மீதான வெறுப்பையே தமிழக பாஜக மீது மக்கள் அள்ளி வீசியுள்ளனர் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.. இப்படி கூட்டணியை முறித்து கொண்டு களம் காணுவது பாஜகவுக்கு எப்போதுமே ஆபத்துதான் என்றும் தெரிய வருகிறது..

குறைகள்
திமுகவின் வெறும் குறைகளை மட்டுமே பிரச்சாரங்களில் சொல்லி, அதன்மூலம் ஆதரவை பெருக்கி கொள்ள முனையலாம் என்ற நினைப்பையும் தவிடுபொடியாக்கி உள்ளது.. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான், அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என்ற கருத்து ஆழமாக வேரூன்றப்பட்டுவிட்டது.. தங்களுடைய சொந்த பலத்தையும் பாஜக முழுமையாக உணர்ந்திருக்கும்.. ஆக மொத்தம், தாமரை மலராமலேயே, மொட்டாகவே கருகி போய்விட்டது...!
-
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications