குறி வைத்த நபர் வீட்டில் இல்லை.. தலைக்கேறிய ஆத்திரம்.. நாயை சரமாரியாக வெட்டி சென்ற கும்பல்!

கத்தி வெட்டு பட்டு, வளர்த்த ஓனரை காப்பாற்றி உள்ளது ஒரு நாய்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Watch Video : Dog saves 17 year old owner rowdy in Chennai

    சென்னை: கொல்ல வந்த நண்பர் வீட்டில் இல்லை.. அந்த ஆத்திரத்தில் குரைத்து கொண்டிருந்த நாயை வெட்டி விட்டு தப்பியுள்ளது ஒரு கும்பல். ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நாயை கண்டு வீட்டில் உள்ளவர்கள் நடுங்கி போய்விட்டனர்!

    போரூரை சேர்ந்தவர் 17 வயது ரவி. இவர் ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவரது வீட்டிற்கு நண்பர்கள் வெங்கட் 19, முத்து 20, அருண் 20 ஆகிய பேரும் ரவி எங்கே என்று தேடி வந்துள்ளனர். 3 பேருமே போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. ரவி அவர் வீட்டில் இல்லை என்று அவரது பாட்டி சொன்னார். ஆனாலும், 3 பேரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.

    Dog saves 17 year old owner rowdy in Chennai

    அப்போது வீட்டில் வளர்த்து வந்த நாய், அவர்களை உள்ளே செல்ல விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. இதில் 3 பேருக்கும் ஆத்திரம் அதிகமாகி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நாயின் வாயின் இரண்டு பகுதிகளிலும் வெட்டிவிட்டு, தப்பி சென்று விட்டனர்.

    கத்தியால் வெட்டியதால், ரத்தம் சொட்ட, சொட்ட வலியால் நாய் துடித்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற 3 பேரையும் துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனாலும் தப்பி விட்டனர். வெட்டுக்காயமடைந்த நாயை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த வீட்டின் நபர்கள், போரூர் போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசாரும் இந்த புகார் குறித்து விசாரித்தனர். அப்போதுதான், 17 வயதான ரவி, பகலில் வேலைக்கு போனாலும், நைட் நேரத்தில் தனியாக செல்பவர்களை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பவர் என்று தெரியவந்தது. இதற்கு இந்த நண்பர்களும் உடந்தை.

    இப்படி ஒரு செல்போனை திருடியதில், அதை பங்கு போட்டு கொள்வதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ரவியை தீர்த்து கட்ட போதையில் வீட்டுக்கு கத்தியோடு வந்துள்ளனர். ஆள் இல்லாததாலும், நாய் குரைத்ததாலும், அதன் வாலை வெட்டி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து ரவி, வெங்கட் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன், தப்பி ஓடிய அருண் என்பவரையும் தேடி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+