பழைய பாரம்பரிய வாகனம் என நம்பி வாங்கி ஏமாறாதீர்கள்!
சென்னை : பழைய வாகனங்களை வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்கும்படி வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர் MG.ஜெயநிதி என்பவர் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 வருடம் முடிந்த வாகனங்களை ஒட்ட முடியாது என்றும் எனவே பழைய வாகனங்களை கவனமுடன் வாங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழைய வாகனங்களை வாங்குவது தொடர்பாக ஆய்வாளர் ஜெயநிதி வெளியிட்ட பதிவில், "தற்பொழுது மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி "சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும்" என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பழைய வாகனங்கள்
சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான அரசாங்கம் நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும். அதை அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்ட புதிய BS-6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏமாற்றம்
ஆனால் தற்பொழுது சில தரகர்கள் YAMAHA RX100 , YAMAHA RD350 ,YAMAHA RXZ,,, ROYAL ENFIELD , JAWA , YESDI , RAJDOOT, சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பாரம்பரிய வாகனங்கள் எனக்கூறி மேற்கண்ட வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் 2 லட்சம் மற்றும் 3 லட்சம் என அதிக விலைக்கு விற்று வெகுஜன மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவே தயவுசெய்து எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் ஏமாற வேண்டாம் .

ஓட்ட முடியாது
இவ் வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது. ஆகவே மக்கள் யாரும் வாங்கி ஏமாற வேண்டாம். வாகனம் அனைத்தும் உடைக்கும் பொழுது வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப்படும். இவ்வாறு அனைத்தும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி ஆகிவிடும். இச்செய்தி யை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தெரிவியுங்கள் " என்று கூறியுள்ளார்.

பழைய இரும்பு கடை
ஆய்வாளர் ஜெயநிதி சொன்னது போல் பழைய வாகனங்கள் ஸ்கிராப்பிங்கிற்கு மட்டுமே இனி போகும், தகுதி தேர்வில் (எப்சி) தோல்வி அடைந்த சொந்த வாகனங்களும், 15 வருடம் ஆன வாகனங்களும் சாலையில் ஓட அனுமதி இல்லை. எனவே இனி பழைய வாகனங்கள் பழைய இரும்பு கடைக்குத்தான் போகும் என்பது மறுக்க முடியாது உண்மை,
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications