சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுழன்றடிக்கும் சூறாவளி.. 5 நாள் கடல் பக்கம் போகாதீங்க! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கும் நிலையில் சூறாவளிக் காற்று வீசுவதால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

நாளை டிசம்பர் 5-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், அது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

கிட்ட நெருங்கி வந்து பட்டுனு கேமராவை விழுங்கிய சுறா.. லைவாக தெரிந்த உடல் பாகங்கள்! நடுக்கடலில் ஷாக்!கிட்ட நெருங்கி வந்து பட்டுனு கேமராவை விழுங்கிய சுறா.. லைவாக தெரிந்த உடல் பாகங்கள்! நடுக்கடலில் ஷாக்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்து உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. கலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் 5 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது.

சூறாவளிக்காற்று

சூறாவளிக்காற்று

அந்த அறிக்கையில், "இன்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

60 கி.மீ. வேகம்

60 கி.மீ. வேகம்

நாளை (05.12.2022) அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் (06.12.2022) அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா

மன்னார் வளைகுடா

டிசம்பர் 7 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்

கடலுக்கு செல்ல வேண்டாம்

டிசம்பர் 8 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர - தமிழக கடலோரப் பகுதிகள், வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.ன்மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
The Chennai Meteorological Department has warned fishermen not to go fishing for 5 days due to cyclonic winds as a low pressure area is expected to form in the Bay of Bengal tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X