நான் தமிழ் குடும்பமில்ல.. தமிழை திணிப்பது தவறு.. அதில் 3 முறை “பெயில்” - பாஜக பெண் நிர்வாகி சர்ச்சை
சென்னை: தமிழ்நாட்டில் தமிழ் திணிக்கப்படுவது பற்றி யாரும் பேசவில்லை என்றும், தமிழை பிடிக்கவில்லை என்றால் அதை கற்க வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் தமிழ்நாடு பாஜக விளையாட்டுப்பிரிவு செயலாளர் அலிசா அப்துல்லா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல கார் மற்றும் பைக் பந்தைய வீராங்கனையான அலிஷா அப்துல்லா கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது 'தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்து இருக்கிறேன். பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்.' என்று அவர் உறுதியளித்தார்.

பாஜகவில் பதவி
இதனை தொடர்ந்து அலிசா அப்துல்லாவுக்கு பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளர் பதவி கிடைத்தது. இதனை அடுத்து பாஜகவுக்காக பல்வேறு யூடியூப் சேனல்களின் நேர்காணல்களில் அவர் கலந்துகொண்டு பேசி வருகிறார். அவற்றில் இவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தி கற்க வேண்டும்
இந்தி மொழி தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தி 3 வது மொழியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாதுகாப்பு முக்கியம். நான் பெண்களுக்காக பேசுகிறேன். தமிழ்நாட்டில் பாதுகாப்பு உள்ளது. ஆனால், வட மாநிலங்களில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.

தமிழில் கவனம் செலுத்தக்கூடாது
இந்தி தெரிந்திருந்தால் தைரியமாக அந்த மொழியில் பேசிவிட்டு தப்பிக்கலாம். ஆனால், தமிழை வைத்துக்கொண்டு அங்கு எதுவும் செய்ய முடியாது. இந்தி பேசுபவர்கள் தமிழ்நாடு வந்தார்கள் என்றால், அவர்களால் இந்தியை மட்டும் பேசி தாக்குப்பிடிக்க முடியாது. நமக்கு தேசிய மொழி வேண்டும். அதே நேரம் தமிழில் அதிக கவனம் செலுத்தக்கூடாது.

பெண்களுக்கு பாதுகாப்பு
இந்தி, தமிழ் ஆகிய மொழிகளை படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது அவரவர் விருப்பம். நீங்கள் இரவு 9 மணிக்கு ஐதராபாத்திலோ, டெல்லியிலோ நடந்து செல்கிறீர்கள். அப்போது 4 பேர் உங்களிடம் தகராறு செய்தால் அவர்களிடம் நீங்கள் இந்தியில் கெட்ட வார்த்தையில் பேசினாலோ, இந்தியில் கத்தினாலோ தப்ப முடியும்." என்றார்.

தமிழில் 3 முறை தோல்வி
இதனை பகிர்ந்து பலர் அலிசாவை விமர்சித்து வரும் நிலையில், வேறு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், "நான் சிறுவயதில் இருக்கும்போது ஒரு 15 - 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் முக்கிய மொழியாக இருந்தது. அதை கட்டாயம் படிக்க வேண்டும். நான் 3 முறை தமிழ் தேர்வில் தோல்வியடைந்தேன்.

தமிழ் திணிப்பு
இது ஒரு தமிழ் மொழி திணிப்பு. அதை பற்றி யாருமே பேசவில்லை. அதற்கு நானே ஒரு சாட்சி. தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்கிறார்கள். தமிழில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆசிரியர்களே பாஸ் செய்துவிடுவார்கள். எதை கற்க வேண்டும் என்பது எனது சுதந்திரம்.

தமிழ் படிக்க அவசியமில்லை
பிரென்சு மொழியை கற்க வேண்டும் என எங்களை கட்டாயப்படுத்த முடியாது அல்லவா? தமிழை கற்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. தமிழ் பிடிக்காவிட்டால் இந்தி, பிரென்சு, தமிழ் மொழிகளில் எதையாவது ஒன்றை தேர்வு செய்யலாம். சர்வதேச பள்ளியில் தமிழை கட்டாயம் கற்க வேண்டும் என்றால் வெளிநாட்டு மாணவர்கள் எப்படி கற்பார்கள்.

தமிழ் குடும்பம் இல்லை
அனைத்து பள்ளிகளிலும் பிரென்சு மொழி கட்டாயம் என்றால் பெரிய பிரச்சனையாகும். அனைத்து மக்களிடமும் தமிழை தணிப்பது தவறு. கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களை படிக்கும் நேரத்தில் நான் தமிழையே படித்துக் கொண்டு இருந்தேன். எனது குடும்பம் தமிழ் பின்னணி கொண்டது இல்லை." என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications