Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்சூரன்ஸ் போடாதீங்க..? பங்குச்சந்தை ஆபத்து? எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகள் ஒரே நாளில் 16 ஆயிரம் கோடி சரிவை எட்டியுள்ள நிலையில் முதலீட்டாளர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது பற்றி ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்திருக்கிறார்.

சூரிய மின்சக்தி திட்டத்திற்காக கவுதம் அதானி 2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு, அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள விவகாரம் இந்திய அரசியல் களத்தில் அனலை கிளப்பி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதத்தைக் கிளப்பத் திட்டமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து அதானி மீது பல்வேறு புகார்களை பொது வெளியில் முன் வைத்து வருகிறார்.

gautam adani lic policy

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவை எட்டின. அதை செயற்கையாக மத்திய அரசு தாங்கிப் பிடித்துள்ளது என்று பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இப்போது மீண்டும் அதானி மீதான வழக்கு இந்தியப் பங்குச் சந்தையைச் சரிவை நோக்கி தள்ளி இருக்கிறது.

இனி வரும் காலங்களில் சந்தையின் நிலை எப்படி இருக்கும் ? அதைப் பற்றி பங்குச் சந்தை ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன், "இந்தியப் பொதுத்துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க டாலரில் சுமார் 2 ஆயிரத்து 29 கோடி ரூபாய் அதானி குழுமம் லட்சம் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வழக்கு. மொத்தம் 6 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. அதில் 3 பேர் இந்தியர்கள்.

மேலும் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதானி க்ரீன், அசூர் பவர் இந்த இரண்டு நிறுவனமும் இதில் சிக்கி இருக்கிறது. Foreign Contribution Corruption Act என்று ஒரு சட்டம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு நிறுவனம் பதிவு பெற்றிருந்தாலோ அல்லது பாண்டு பத்திரங்கள் மூலம் கடன் பெற்றாலோ இந்தச் சட்டத்தின் படி வழக்கு தொடரலாம்.

இந்த விவகாரத்தில் அதானி கம்பெனி அமெரிக்காவிலிருந்து 300 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளது. அதில் 165 மில்லியன் டாலர் அமெரிக்க முதலீட்டாளர்கள் மூலமாக திரட்டப்பட்டுள்ளது. அசூர் பவர் நிறுவனம் நியூயார்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆகவே, வழக்குப் போடப்பட்டது. இதை அமெரிக்க எஃப்பிஏ தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை எஃப்பிஏ போடும் வரை இந்தியாவில் உள்ள செபி என்ன செய்தது? அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது? இந்தத்துறைகள் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அதை யார் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்? பிரதமர் என்ன செய்து கொண்டுள்ளார்?

முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு நொடியில் கைது செய்தார்கள். துணை முதல்வரை கைது செய்தார்கள். ஜார்கண்ட் முதல்வரை கைது செய்தார்கள். ஆனால், அதானியை மட்டும் ஏன் விசாரிக்கத் தாமதிக்கிறார்கள்?

எல்.ஐ.சி என்பது பொதுத்துறை நிறுவனம். அது அதானி பங்குகளை வாங்கி இருக்கிறது. இந்த வழக்கு பாய்ந்த உடன் ஒரே நாளில் 16 ஆயிரம் கோடிக்குப் பங்கு மதிப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆயிரக் கணக்கில் அதானி பங்குகளை ஏன் வாங்க வேண்டும்? அதை வாங்கச் சொல்லி உத்தரவிட்டது யார்? இதற்கு நிதியமைச்சர் விளக்கம் தரவேண்டியது கடமை இல்லையா? அவர் வாய் திறப்பாரா? மாட்டாரா? கேள்வி வருமா? வராதா?

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான போது அதானி பங்குகள் சரிந்தன. உடனே எல்.ஐ.சி பங்குகளை வாங்க வைத்து நிலைமையைச் சரி செய்தார்கள். ஒரு தனியார் நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு பொதுத்துறையை நிதியை ஏன் செலவிட வேண்டும்? இப்போது மீண்டும் எஃப்பிஏ வழக்கைப் போட்டுள்ளது. மீண்டும் இதேபோல அதானியை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவார்கள். என் நண்பர் ஒருவர் 80 லட்சம் எல்.ஐ.சி பொதுத் துறை பங்குகளை வாங்கினார். இன்று திவாலாகி நிற்கிறார்? அவருக்கு யார் பொறுப்பேற்பார்கள்? அவரைப் போல கோடிக் கணக்கான மக்கள் எல்.ஐ.சி.யில் பணம் போட்டுள்ளார்கள். அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?

அதானி மீது ராகுல் கடந்த 3 வருடங்களாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி வருகிறார். மோடி அதற்கு விளக்கம் அளிக்காமல் ராகுலை தகுதி நீக்கம் செய்தார். இன்று அதானி மீது எஃப்பிஏ புகார் அளித்துள்ளது. அதில் உண்மை இல்லை என்றால், அதானி சரணடைந்து விளக்கம் தரவேண்டியதுதானே? இதை ட்ரம்ப் விசாரிப்பாரா? அவரே வெற்றி பெறுவதற்குள் அதானி ஒரு ட்வீட் போடுகிறார். அதில் 10 மில்லியன் டாலர் தான் அமெரிக்காவில் முதலீடு செய்ய உள்ளதாகச் சொல்கிறார். பிறகு இந்த வழக்கு நியாயமாக நடைபெறுமா?

இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் ஏறினாலும் தொடர்ந்து சரிந்துகொண்டேதான் போகும். கடந்த ஜூன் மாதம் என்ன நிலைமையிலிருந்ததோ அதை நிலையை மீண்டும் பங்குச் சந்தை அடைந்துவிட்டது. இனிமேலும் 1500 பாயிண்ட்ஸ் விழுவதற்காக வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. 2020 வரை 2 கோடி சிறு முதலீட்டாளர்கள் தான் இருந்தார்கள். 4 ஆண்டுகளில் அதை பாஜக 8 கோடியாக அதிகரித்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் பங்குச் சந்தையில் பணத்தைப் போட வைத்துவிட்டார்கள். அது யார் தப்பு? பணம் போட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டாமா?

எனவே நான் என்ன சொல்கிறேன் என்றால் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியாக இருந்தாலும் அதில் முதலீடு செய்யாதீர்கள். முதலீட்டுக்கு முறையான லாபம் கிடைக்காது. இப்போது போட்ட முதலீடு லாபத்திலிருந்தால் உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிவிடுங்கள். அதுதான் புத்திசாலித் தனம்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+