"க்ளீன் போல்டு".. கண்ணை உறுத்தும் "திமுக".. ஒரே மாதிரி ஆரம்பிச்சிட்டாங்களே.. பாஜகவை மிஞ்சும் அதிமுக

திமுக ஆட்சி விரைவில் கவிழும், என்று அதிமுக ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்ந்து வரப்போவதாக அதிமுகவில் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டன.. என்ன காரணம்? இது சாத்தியமா?

மத்திய அரசாங்கமே எல்லா மாநிலங்களையும் கட்டி ஆள முடியாது என்பதால்தான் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.. தாய்மொழி மட்டுமே அவர்களை ஒருங்கிணைக்கும் என்பதால்தான் அவை மொழிவழியாக பிரிக்கப்பட்டன.. ஆனால், அந்த மாநிலங்களுக்கென்று அதிகாரங்கள் எதுவும் வேண்டாமா?

"மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற கோரிக்கை பல காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது.. இருந்தாலும் எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அதை மட்டும், எந்த காலத்திலும் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.. மாறாக, அதிகாரங்களை மட்டும் தாங்கள் எடுத்து கொள்வதில் முனைப்பு காட்டிவருகிறது..

கருணாநிதி

கருணாநிதி

அதுமட்டுமல்ல, மாநிலங்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களும், அரசியல்வாதிகளை போலவே பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசிடம்தான் குவிந்து வருகிறது.. மாநில சுயாட்சிக் கொள்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, போராட்டங்களை தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா ஒருமுறை, வெளியிட்டிருந்தஅறிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறை" பற்றி கூறியிருந்தார்..

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

இது அப்போதே அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு விவாதத்தை கிளப்பியது. "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்லவே.. காரணம், 1967 வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, 1968களில் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட பிறகு, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.. ஆனால், மத்திய பாஜக அரசு இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால், தேர்தல் செலவு குறையும் என்று காரணம் சொல்லப்பட்டது..

"ஒரே நாடு ஒரே தேர்தல்"

எனினும், இதனால் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக விவாதங்கள் வெடித்தன. அதற்கு பிறகு இந்த அறிவிப்பு குறித்து மத்திய பாஜக வேறு எதையும் முன்னெடுக்கவில்லை என்றே தெரிகிறது.. சமீபகாலமாக, திமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் என்று சொல்லி வருவதை பார்க்கும்போது, ஒருவேளை "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.. அதற்காக ஒரு அரசை கலைப்பது என்பது அவ்வளவு எளிதாகிவிடுமா? 2024ல் எம்பி தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்து என்று முடிவானால், மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா? இதற்கு மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளுமா? அல்லது விரும்பி ஓட்டுப்போட்டு தங்களுக்கான அரசை தேர்ந்தெடுத்த மக்கள்தான் ஒப்புக் கொள்வார்களா? ஆட்சி கலைந்ததும், கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்தபடுமா? என்றெல்லாம் புரியாத குழப்பமாகவே நீள்கிறது.

 சான்ஸ் + சாய்ஸ்

சான்ஸ் + சாய்ஸ்

அதேபோல, 355 சட்டப்பிரிவையோ, 355 சட்டப்பிரிவையோ எளிதாக பயன்படுத்திவிடவும் முடியாது என்பதால்தான், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, திமுகவுக்கு அழுத்தம் தந்து, அதன்மூலம் இந்த அரசை டேமேஜ் செய்து, ஆட்சியை கலைத்துவிடும் நோக்கத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கணக்கு போட்டு வருவதாக சொல்கிறார்கள்.. தமிழகம் மட்டுமில்ல, எங்கெல்லாம் மாநில அரசுகள் வலுவாக உள்ளதோ, அங்கெல்லாம் இதுபோன்ற யுக்திகளை பாஜக கையில் எடுத்து வருகிறதாம்.. தமிழகத்தை பொறுத்தவரை, எம்பி தேர்தலுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலும் வரக்கூடும் என்ற பாஜக மட்டுமல்லாமல், அதன் கூட்டணி கட்சிகளே பேச ஆரம்பித்து விட்டன.

 40 அமாவாசை

40 அமாவாசை

இதை முதன்முதலில் பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்தவர் எடப்பாடி பழனிசாமிதான்.. "திமுக ஆட்சி விரைவில் கலையப்போகிறது, இன்னும் 40 அமாவாசைதான், 35 அமாவாசைதான்" என்று அமாவாசை கணக்கை சொல்லி வருகிறார்.. அடுத்து, அதிமுக மாஜிக்களும் சொல்லி வருகிறார்கள்.. அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்று உறுதியாக சொல்லி உள்ளார்.. பிறகு சமீபகாலமாக டிடிவி தினகரனும் இதே கருத்தை சொல்லி வருகிறார்.

 ராஜன் செல்லப்பா

ராஜன் செல்லப்பா

இன்றைய தினம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபை தேர்தலும் நடக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும் பேசியுள்ளார்.. அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் நிலையூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றியை இழந்தது.. திமுகவுக்கு ஏன்தான் ஓட்டு போட்டோமோ என்று மக்கள் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்..

 CM எடப்பாடி

CM எடப்பாடி

மறுபடியும் தேர்தல் வரும் என்று தமிழக மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். நான் நிச்சயமாக சொல்கிறேன், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும், எடப்பாடி மீண்டும் முதல்வராவார் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.. ஆக, மாநில சுயாட்சிக்கு எதிராக, இப்படியான குரல்கள் திராவிட கட்சியான அதிமுகவிலிருந்தே வர தொடங்கி விட்டது என்பதுதான் இங்கு நாம் கவனிக்கத்தக்கதாக உள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+