ஒற்றை தலைவலி, வலிப்பு நோயா? கட்டுப்படுத்துவது எப்படி? என்ன உணவு எடுக்கலாம்?.. டாக்டர் பரூக் டிப்ஸ்!
சென்னை: மைக்ரேன் எனும் ஒற்றை தலைவலி, வலிப்பு நோயை எப்படி கட்டுப்படுத்துவது , எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விவரித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வலிப்பு நோய் என்பது மூளை அதிகமாகத் தூண்டப்படுவதால் (ஓவர் எக்சைட் ஆவதால்) உண்டாவதாகும். பொதுவாக நமது மூளையை சாந்தப்படுத்தவும் தூண்டவுமான ரசாயனங்கள் தேவையான அளவில் சுரந்து சம நிலையை எட்ட உதவும்.
சில நேரங்களில் நாம் டல்லாக இருப்பதற்கு காபா எனும் காமா அமினோ பூட்யரிக் அமிலமும் ஓவர் எக்சைட்டடாக இருப்பதற்கு க்ளூடாமேட்டும் மாறி மாறி தங்களின் வேளையைச் செய்கின்றன. இதில் நமது மூளையில் காபாவின் அளவுகள் குறையும் போதும் க்ளூடாமேட் அளவுகள் கூடும் போதும் மூளை மேலதிமாகத் தூண்டப்படுகிறது.

வலிப்பு
இதனால் வலிப்பு/ மைக்ரேன் போன்றவை ஏற்படுகின்றன. சராசரி மனிதன் தனது உணவின் பெரும்பகுதியை மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸ் வழியே அடைகிறான் . நம் உணவுத் தட்டில் 90% கார்போஹைட்ரேட்ஸ் தான் இருக்கிறது. எனவே இந்த மாவுச்சத்தானது க்ளூகோஸாகி மூளைக்கு எரிபொருளாகிறது.

க்ளூகோஸ்
க்ளூகோசை எரிபொருளாக நம்பி இருக்கும் போது ஒருவர் அதிகமாக உண்ணும் போது ரத்த க்ளூகோஸ் அளவுகள் உயரும் . உண்ணாமல் இருக்கும் போது ரத்த க்ளூகோஸ் அளவுகள் வெகுவாக குறையும். இப்படியான க்ளூகோஸ் ஏற்றத் தாழ்வுகளின் போது மூளை திக்குமுக்காடித்தான் போகிறது. குறிப்பாக ரத்த க்ளூகோஸ் அளவுகள் திடீரென உயரும் போது மூளை அதிகப்படியாக தூண்டப்படுகிறது.

மாத்திரை
இப்படியாக எந்த மருந்து மாத்திரைக்கும் அடங்காத வலிப்பு நோயாளிகளுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மாவுச்சத்தை நம்பியிருக்கும் உணவு முறையை மாற்றி விரதமுறையை பரிந்துரைத்து வந்தனர். எதற்கும் அடங்காத வலிப்பு நோயாளிகளை மூன்று நாட்கள் விரதத்தில் வைக்கும் போது வலிப்பு நின்று விடுவதை அறிந்தனர்.

கீடோஸ் நிலை
மனிதனின் உடல் விரதத்தில் இருக்கும் போது தற்காலிகமாக கீடோஸிஸ் எனும் நிலைக்கு செல்கிறது என்றும் இந்த கீடோசிஸ் நிலையில் மூளையானது க்ளூகோஸில் இயங்காமல் கீடோன்கள் மூலம் இயங்குகின்றது என்பதை அறிந்தனர். இப்படியான கீடோசிஸ் நிலையை உணவு முறை மூலம் அடையும் விதமாக 70% கொழுப்பு FAT, 20% புரதம் PROTEIN, 5-10% மாவுச்சத்து CARBOHYDRATES என்ற தினசரி மாவுச்சத்தின் அளவை 10 முதல் 20 கிராம் என்று குறைத்து கீடோஜெனிக் டயட் என்று பெயர் வைத்தனர்.

கீடோஜெனிக் டயட்
கீடோஜெனிக் டயட்டுக்கு பேலியோ / குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை என்று பல பெயர்கள் உண்டு. இப்படியாக எதற்கும் குணமாகாத வலிப்பு நோயுள்ள குழந்தைகளுக்கு இந்த தினசரி 10 கிராம் மாவுச்சத்து மட்டும் உண்ணும் கீடோஜெனிக் உணவு முறையை வழங்கியதில் வலிப்பு வெகுவாக குறைந்தது. முறையாகக் கடைபிடித்த குழந்தைகளுக்கு சில மாதங்களில் வலிப்பு இல்லாமலும் போனது.

கட்டுப்படாத வலிப்பு நோய்
இன்றும் மேலை நாடுகளில் ரிஃப்ரேக்டரி சீசர்ஸ் எனும் மாத்திரைகளுக்கு கட்டுப்படாத வலிப்பு நோயாளிகளுக்கு கீடோஜெனிக் டயட் வழங்கப்படுகிறது. வலிப்புக்கு சிகிச்சை எடுக்கும் நோயாளிகளில் 35% பேருக்கு மாத்திரை மருந்துகளுக்கு அடங்காத ரிஃப்ரேக்டரி வலிப்பு இருக்கிறது. எனது முக்கியமான வேண்டுகோள் வலிப்பு / மைக்ரேன் போன்ற மூளை ஓவர் எக்சைட் ஆகி அதனால் ஏற்படும் நோய்களுக்கு குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை / பேலியோ / கீடோ உணவு முறை நல்ல தீர்வாக அமையும்.

மூளை சார்ந்த பிரச்சினை
கட்டாயம் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அத்துடன் வலிப்பு/ மைக்ரேன் போன்ற மூளை சார்ந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு குறை மாவு, நிறை கொழுப்பு உணவு முறை நல்ல முன்னேற்றத்தை தரும். இது அறிவியல் பூர்வமானது. வலிப்பு / மைக்ரேன் இருப்பவர்கள் தங்களின் உணவில் இருந்து சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி / தேன் / இனிப்பான பழங்கள் இன்னும் இனிப்பான அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும்?
கொழுப்பு புரதம் நிரம்பிய உணவுகளான
- முட்டை
- பால்
- வெண்ணெய்
- நெய்
- சீஸ்
- மாமிசம்
என்று தங்களின் உணவுத்தட்டை அமைத்துக் கொண்டு மாவுச்சத்து நிறைந்த தானியங்களை சற்று ஒதுக்கி வைத்தால் வலிப்பு / மைக்ரேன் அடங்கிப்போகும் வாய்ப்பு அதிகம். முயற்சி செய்து பார்க்கவும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications