• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பரோட்டா சூரி மாதிரி கோடு போட்டு சாப்பிட்டீங்க... ! யூடியூப் சேலஞ்சர்ஸுக்கு சித்த மருத்துவர் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: போட்டிக்காக அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால் உடல்நிலை பாதிக்கப்படும், குடல்களில் பிரச்சினை ஏற்படும் என சித்த மருத்துவர் ஒய் ஆர் மானேக்சா அறிவுறுத்தியுள்ளார்.

  Corona மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? | Oneindia Tamil

  எம்டி (சித்தா) படித்துள்ள மானேக்சா பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

  கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

  இதுகுறித்து சித்த மருத்துவர் மானேக்சா ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

  வசதிகள்

  வசதிகள்


  கே: ஆங்கில மருத்துவத்தில் இருக்கும் வசதிகள் சித்த மருத்துவத்தில் இல்லை என்கிறார்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன?

  ப: நாள்பட்ட நோய்களுக்கு சிறந்த மருத்துவ தீர்வு சித்த மருத்துவத்தில் உண்டு. நடுக்குவாதத்திற்கு பூனைக்காலி என்ற ஒரு விதை இருக்கிறது, அதை கொடுக்கிறோம். அது போல் பக்கவாதத்திற்கும் மருந்து கொடுக்கிறோம். நரம்பியல் சார்ந்த மருந்துகளுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. அது போல் குழந்தையின்மைக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது.

  குணப்படுத்த வழி

  குணப்படுத்த வழி


  கே: சித்த மருத்துவத்தில் எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்தலாம்?

  ப: ருமடாய்டிடிஸிற்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. அனைத்து வகையான ஆர்திரிடீஸ்களுக்கும் மருந்து இருக்கிறது. ஹார்மோன் பிரச்சினைகளால் குழந்தையின்மை என வந்துவிட்டால் குறுகிய காலத்தில் 45 முதல் 60 நாட்களில் சரி செய்து விடலாம். கர்ப்பப்பை சினை கட்டிகள் என்றால் 3 முதல் 4 மாதங்களில் குணப்படுத்திவிடலாம்.

  என்ன ஸ்டேஜ்

  என்ன ஸ்டேஜ்

  கே: கேன்சருக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா?

  ப: புற்றுநோய்க்கு என்றே சித்தர்கள் அருமருந்துகளை கூறியுள்ளார்கள். பஞ்சசூத மிளகு, நந்தி மிளகு, பஞ்சபாடான மிளகு உள்ளிட்ட மருந்துகள் உள்ளன. ஆரம்ப கட்டத்தில் வந்துவிட்டால் புற்றுநோயை குணப்படுத்திவிடலாம். இதற்கு சித்த மருத்துவத்திலும் நவீன மருத்துவத்திலும் நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஆனால் உடல் முழுவதும் பரவும் மெட்டாஸ்டேடிஸ் ஆனவுடன் குணப்படுத்துவது கடினம்.

  தடுக்க வழி

  தடுக்க வழி

  கே : புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

  ப: வாய் புற்றுநோய் வராமல் தடுக்க புகையிலை, புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். நுரையீரல் புற்றுநோயை தடுக்க சிகரெட் பிடிக்கக் கூடாது. கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க குடிப்பழக்கம் இருக்கக் கூடாது. கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க human Papillomavirus எனும் தடுப்பூசி இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் அந்த புற்றுநோயும் வராது. மார்பக புற்றுநோய்க்கு அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

  மருந்துகள்

  மருந்துகள்

  கே: இனி வரும் காலங்களில் பயோவார் வந்தால் அதற்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றனவா?

  ப: இந்த பயோவார் என்பது மோசமான அணுகுமுறை. இந்த கொரோனா வைரஸ் சீனாவில் வுகான் நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. வைரஸ், பாக்டீரியாக்கள் வராமல் தடுக்க மஞ்சளை அன்றாடம் சேர்க்க வேண்டும். பசும்சாணத்தால் வீட்டு வாசலை மெழுகுதல், வேப்பிலை கட்டி வைத்தல் இவையெல்லாம் கிருமிநாசினிகள்தான்.

  இயற்கை உணவு

  இயற்கை உணவு

  கே: ஜங்க் புட் சாப்பிட்ட ஒருவர் இயற்கை உணவுக்கும் சித்த மருத்துவ முறைக்கும் மாறலாமா?

  ப: தாராளமாக மாறலாம். சித்த மருத்துவத்தில் நாங்கள் அதிகம் எடுக்க சொல்வது சிறு தானியங்கள். ஜங்க் புட் சாப்பிடுவோர் நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும். இதனால் உடல் பருமன், மலச்சிக்கல், ஜீரண பிரச்சினைகள் வராது. கருப்பு கொள்ளு அல்லது வெள்ளை கொள்ளுவை சாப்பிட்டால் உடல் பருமன் குறைக்கும். வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் கொழுப்பை குறைக்கும்.

  20 இட்லி

  20 இட்லி

  கே: ஒரே நேரத்தில் 3 கிலோ பிரியாணி சாப்பிடுவது, 20 இட்லி சாப்பிடும் சேலஞ்ச்களால் உடல் நிலை பாதிக்குமா

  ப: கட்டாயம் பாதிக்கும். உடலை பொருத்தமட்டில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஒரு பொருளை நம் மனம் விரும்பி சாப்பிடும் ஆனால் அது அளவுக்கு அதிகமாக போனால் அதை நம் வயிறு ஏற்றுக் கொள்ளாது. நாம் தினமும் என்ன சாப்பிட்டு பழகினோமே அதைத்தான் எடுக்க வேண்டும். சேலஞ்சுக்காக எல்லாத்தையும் சாப்பிடக் கூடாது.

  வயதுக்கு வந்த குழந்தைகள்

  வயதுக்கு வந்த குழந்தைகள்

  கே: வயதுக்கு வந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்

  ப: உளுந்து களி மிகச் சிறந்த மருந்து. நல்லெண்ணெயில் வெல்லம் போட்டு உளுந்தங்களியை செய்ய வேண்டும். இதை முதல் நாள் மாதவிடாய் வந்த காலத்திலிருந்து ஒரு மாதத்திற்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். நாட்டுக் கோழி முட்டையில் நல்லெண்ணெய் 10 துளிகள் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். இதை ஒரு 15 நாட்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதனால் இடுப்பு எலும்பு வலுவடையும். வெந்தகளி, சிவப்பு கொண்டைக் கடலை, எள்ளு உருண்டை, மாதுளை பழம் சாப்பிடலாம்.

  என்ன மருந்து

  என்ன மருந்து

  கே: கருப்பு பூஞ்சைக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா?

  ப: இது ஒரு புதிய நோய் என நினைக்கிறோம். இது காலம் காலமாக மனிதன் உருவான காலத்திலிருந்தே இந்த பூஞ்சைகள் இருக்கின்றன. கொரோனா வந்த நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு கட்டுக்கடங்காமல் செல்கிறது. ஸ்டீராய்டு மருந்துகளாலும் சுகர் அளவு அதிகரிக்கிறது. இவர்களையே கருப்பு பூஞ்சை தாக்குகிறது. கந்தக ரசாயனம், கந்தக சுடர் தைலம், கந்தக மெழுகு போன்ற மருந்துகள் பூஞ்சைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப நிலையில் வந்தால் நிச்சயம் எந்த நோயையும் குணப்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் மூலம், பவுத்திரம் ஆகியவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்கிறோம்.

  இளநரைக்கு மருந்து

  இளநரைக்கு மருந்து

  கே: இளநரைக்கு மருந்து சொல்லுங்கள்

  ப: 30 வயதுக்குள் வரும் இளநரைக்கு கரிசலாங்கண்ணி எனும் செடியை நிழலில் காயவைத்து பொடி செய்து அதை 45 நாட்களுக்கு தேனில் கலந்து வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி, நீல அவுரி ஆகிய இரண்டையும் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து குளித்தால் அந்த கருப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்.

  டிப்ஸ்

  டிப்ஸ்

  கே: நோய் நொடியின்றி வாழ எளிமையான டிப்ஸ் கூறுங்களேன்?

  ப: தினந்தோறும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடலாம். காலையில் இஞ்சி, மதியானம் சுக்கு இரவில் கடுக்காய் எடுக்கலாம். இஞ்சியை தேனில் ஊறவைத்து 5 மில்லி சாறை எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஜீரண பிரச்சினை, உடல் பருமன், தொப்பை இருக்காது. மதியம் ஒரு சிட்டிகை அளவு சுக்குப் பொடியை பசும் நெய்யில் சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இரவில் தூங்கும் போது ஒரு டீஸ்பூன் கடுக்காயை வென்னீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

  English summary
  Palayamkottai Government Siddha Hospital and Medical College Dr Y.R.Manekshah MD says that health will be affected if we eat more for challenges.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X