சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஎஸ்கே வீரரை உட்கார வைக்கும் டிராவிட்.. நியூஸிக்கு எதிராக ரெடியான இந்திய அணி- அந்த 11 பேர் இவர்களா?

Google Oneindia Tamil News

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி பல இளம் வீரர்களை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டி 20 தொடரில் ஆட தயாராகி வருகிறது. கோலி கேப்டன்சியில் இருந்து பதவி விலகிய நிலையில் ரோஹித் சர்மா டி 20 தொடர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவலி! உச்சம் தொடும் டெங்கு.. 6 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. தலைநகரில் 5270 பேருக்கு பாதிப்புபுதிய தலைவலி! உச்சம் தொடும் டெங்கு.. 6 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. தலைநகரில் 5270 பேருக்கு பாதிப்பு

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். நவம்பர் 17ம் தேதி நடக்க உள்ள டி 20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய டி 20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆடும் அணி

ஆடும் அணி

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இந்த தொடருக்கான பயிற்சியில் இறங்கி உள்ளனர். ராகுல் டிராவிட் அணியோடு இணைந்துவிட்ட நிலையில் பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மாதான் இனி டி 20 இந்திய அணிக்கான கேப்டன் என்பதால் இந்த தொடரை வெற்றியோடு தொடங்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஜெய்ப்பூரில் இவர்கள் பயோ பபுளில் இணைந்தனர். இதையடுத்து வீரர்களை சந்தித்து தனி தனியாக ராகுல் டிராவிட் ஆலோசனை செய்தார்.

காரணம்

காரணம்

இந்த உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணம் வீரர்கள் சோர்வாக இருந்ததுதான். இது குறித்து வீரர்களிடம் அவர் ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் ஆட வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. அவர் பேக் அப் ஒப்பனராக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளார்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ராகுல், ரோஹித் ஆகியோர்தான் ஓப்பனிங் இறங்குவார்கள். அதேபோல் ஒன் டவுன் இறங்கி பழக்கப்பட்ட சூர்யா குமார் யாதவ் ஒன் டவுன் இறங்குவார். இதனால் ருத்துராஜ் களமிறங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதன்பின் ஷ்ரேயாஸ் ஐயர்/ இஷான் கிஷான், பின்னர் பண்ட் ஆகியோர் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. பவுலிங் ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ள ஒரே பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இவர்தான் என்பதால் அணிக்குள் நேரடியாக வாய்ப்பு பெறுவார் என்கிறார்கள். ஸ்பின் பவுலர்களில் அஸ்வின், சாஹல் அணிக்குள் வரும் வாய்ப்புகள் உள்ளதாம். டிராவிட் இந்திய அணியில் இளம் வீரர்கள், மூத்தவர்கள் என்று கலவையாக எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கலவை

கலவை

அதன்படி அஸ்வின், ரோஹித், புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும். ஐபிஎல்லில் நன்றாக ஆடிய ஆவேஷ் கானும் அணிக்குள் வருவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு பவுலராக ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. வலைப்பயிற்சியில் இவர் நன்றாக பவுலிங் வீசி வருகிறாராம்.

அணி

அணி

இதனால் டிராவிட் - ரோஹித் ஆகியோர் பின்வரும் அணியை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. ரோஹித், ராகுல், சூர்யா குமார், ஷ்ரேயாஸ், பண்ட், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், சாஹல், ஆவேஷ் கான் ஆகியோர் இந்திய அணியில் முதல் போட்டியில் ஆடும் வாய்ப்பு உள்ளன. ரூத்துராஜ், இஷான் கிஷான் ஆகியோருக்கு டிராவிட் இப்போது வாய்ப்பு தர மாட்டார் என்று கூறப்படுகிறது.

English summary
Coach Dravid and Captain Rohit Sharma may go for young and senior mixed Team India ahead of New Zealand series
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X