வைக்கம் போராட்ட நூற்றாண்டு-தமிழ்நாடு அரசு கொண்டாட்டங்களுக்கு செயலாக்க குழு தேவை : கி.வீரமணி யோசனை
சென்னை: தமிழ்நாடு அரசின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக செயலாக்க குழு அமைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: ஜாதி - தீண்டாமை - பாராமை - நெருங்காமை' ஆகிய மனித உரிமை பறித்த சமூகக் கொடுமைகளின் உச்சமான காட்டுமிராண்டித்தனத்தை, சனாதனத்தினை அந்நாளைய திருவிதாங்கூர் ராஜ்ஜிய அரசு வரிந்து காப்பாற்றி வந்தது. ஒடுக்கப்பட்டு உரிமை பறிக்கப்பட்ட கீழ்ஜாதியார் என்று அழைக்கப்பட்ட ''ஈழவர், புலையர், தீயர், பறையர்'' என்பவர்களுக்கு வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கும் உரிமைக்காக 1924, மார்ச் 30 ஆம் தேதி வெடித்துக் கிளம்பியதுதான் ''வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்'' ஆகும்! அந்நாளில் அங்கே அரசால் காப்பாற்றப்பட்ட சனா தன வருணாசிரமத்தை எதிர்த்து அம்மக்கள் பிரதிநிதி களும், மற்ற மனிதாபிமானிகளும் தொடங்கிய சத்தியா கிரகத்தை முடக்கிவிட்டது அந்த மன்னர் அரசு!

அந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாரை அழைத்து, போராட்டத்தைத் தொடர அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், தந்தை பெரியார் அவர்கள், 1924 ஆம் ஆண்டு அங்கே சென்று போராட்டத்தை நடத்தி, இருமுறை கைதாகி, வைக்கம் போராட்டத்தை ஒரு முக்கிய வரலாற்றுப் போராட்டமாக்கி, தெருக்களில் நடக்கும் உரிமையைப் பெறுவதில் வெற்றிக் கனி பறித்தார். அதன் நூற்றாண்டு இன்றிலிருந்து (30.3.2023) தொடங் குவதால், தமிழ்நாட்டு 'திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் இன்று அறிவித்துள்ள அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும், அதனை விளக்கி முதலமைச்சரின் சுருக்க உரையும் இசைத் தேனாக நமது காதுகளில் ஒலித்தன!
மனித உரிமையின் மாண்புக்கு முன்னோட்டமான இப்போராட்டம் ஒரு துளி ரத்தம் சிந்தாத ஆயுதம் ஏந்தாத ஓர் அமைதிப் புரட்சிவழிப் போராட்டம்! மனித உரிமைக்கான தாய்ப் போராட்டம்! பல மனித உரிமைப் போராட்டங்களுக்கும், ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கும் 'தாய்ப் போராட்டம்' என்றே பொருத்தமாக இதனை அழைக்கலாம்! அதன் முக்கியத்தை இப்போதுள்ள இளைஞர், மாணவர், மக்கள் அறியவேண்டிய, இனி வரக்கூடிய தலைவர்களுக்கும் புரியவேண்டிய தேவையும் கருதி, நமது முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள நூற்றாண்டு விழா செயல் திட்டங்கள் செம்மை பெற, 'செயலாக்கக் குழு' அமைப்பும் முக்கியம்!
வெறும் விழாக்கோலம் தாண்டி, புதிய எழுச்சியை உருவாக்கவும், ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்குத் தூண்டுதலாகவும், பல புதிய சமூகப் புரட்சி சட்டங்களையும், வைக்கம் நூற்றாண்டு காலத்தில் 'திராவிட மாடல்' ஆட்சியும், கொள்கைமிகு முதலமைச்சரும் செய்யவேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுடன் - இதை ஒரு திருப்புமுனையாக அமைப் பது முக்கியம் என்பதையும் நினைவூட்டி, முதலமைச்சருக்கு நமது உளங்கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மனமார - வாயார - கையார வாழ்த்தி, கைதட்டி வரவேற் கிறோம்! ''புதியதோர் உலகு செய்து'' நாட்டை புதிய சமத் துவபுரமாக்கிய நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியை தாய்க்கழகத்தின் சார்பில் மனதார உச்சிமோந்து பாராட்டுகிறோம்! வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்திட உள்ள கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களையும், கேரள அரசையும் மனதாராப் பாராட்டுகிறோம்! இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications