இடைவிடாது கொட்டிய கனமழை.. சென்னை சாலையில் நீந்தி செல்லும் வாகனங்கள்.. வடியவைக்க இன்னும் வேகம் தேவை
சென்னை: சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் நீந்தி செல்லும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், நேற்று காலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சிரமங்களை சந்தித்தனர்.

இடைவிடாது பெய்த கனமழை
இந்த நிலையில் நேற்று இரவிலும் கனமழை தொடர்ந்து பெய்தது. இரவு 10 மணியளவில் தொடங்கிய கனமழை, அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதேபோல் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

குளம் போல் மாறிய சாலைகள்
இதேபோல் சென்னையின் முக்கியப் பகுதியான கிண்டி கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் கனமழையால் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. கிண்டி சிப்காட் எதிரே உள்ள சாலையில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அந்த சாலை குளம் போல் காட்சியளிக்கிறது.

நீந்தி செல்லும் வாகனங்கள்
இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே சாலையை கடந்து போக முடியும் என்ற நிலை இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வரும் ஏராளமானோர், தங்களது வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதேபோல் பூவிருந்தமல்லி பகுதிகளில் உள்ள ஏராளமான தெருக்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

மக்கள் அவதி
கடந்த வாரத்தில் பெய்த மழையை காட்டிலும் கடந்த இரு நாட்களாக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் அதிகளவில் தேங்குவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications