சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கோயிலை" கையில் எடுத்த துர்கா.. புதுப்பித்து கட்டுகிறார்.. ஸ்டாலினுக்கு "முதல்வர்" பதவி வந்து சேருமா

குல தெய்வம் கோயிலை புதுப்பிக்கும் வேலையை துவங்கி உள்ளார் துர்கா ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: "தேர்தல் நெருங்கிவிட்டது.. அதனால் துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போவதும் அதிகமாகிவிட்டது" என்ற சர்ச்சை பேச்சு எழுந்து வருகிறது.. இதற்கு காரணம், தங்களுடைய குலதெய்வ கோயிலை துர்கா புதுப்பிக்க தொடங்கி உள்ளார்.. அதற்கான ஆய்வையும் நேரிலேயே சென்று நடத்தியும் உள்ளார்.

Recommended Video

    புதுப்பிக்கப்படும் குலதெய்வ கோயில்.. நேரில் சென்று ஆய்வு செய்த துர்கா ஸ்டாலின் - வீடியோ

    மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் துர்கா ஸ்டாலின் ஒரு அங்காளம்மன் கோயில் கட்டி வருகிறார்.. அந்த கோயிலை துர்கா ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு ஊரை சேர்ந்தவர்தான் துர்கா.. இவரது குலதெய்வ கோயில் பூம்பூகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் ஆலயம் ஆகும்.

    பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார் புதிய தலைவர் முருகன்-மகிழ்ச்சி-திடீரென சிலாகிக்கும் 'முரசொலி'பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார் புதிய தலைவர் முருகன்-மகிழ்ச்சி-திடீரென சிலாகிக்கும் 'முரசொலி'

    கோயில்

    கோயில்

    இந்த கோயிலைதான் மறுபடியும் புதுப்பிக்கும் வேலையில் இறங்கி உள்ளார்.. இந்த கோயிலின் சுற்று மண்டபங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.. சமீபத்தில் இந்த பணிகளை துர்காவே துவங்கி வைத்திருக்கிறார்.. இதற்கான நிதியுதவி வழங்கியதும் துர்காவேதான்.. இந்த கட்டுமான பணிகளை இவர் நேரில் ஆய்வு செய்யும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. வழக்கம்போல இதை வைத்து சிலர் விமர்சனங்களையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    பகுத்தறிவு

    பகுத்தறிவு

    "எங்களது குடும்பம் பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும்கூட சாமி வழிபாடு செய்வதை எங்கள் குடும்பத்தில் எவரும் தடுப்பதில்லை" என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.. மாரியம்மன் சாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஏற்கனவே துர்கா ஸ்டாலின் தெரிவித்திருந்தாலும், அத்திவரதர் முதல் பழனி, திருப்பதி கோயில்கள் வரை விட்டுவைப்பதில்லை.

    விருதாச்சலம்

    விருதாச்சலம்

    விருதாச்சலத்தில் திருகொளஞ்சியப்பர் கோயிலுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்றவர்தான்.. இங்கு வந்து சாமி தரிசனம் செய்து துண்டு சீட்டில் எழுதிஅங்குள்ள மரத்தில் கட்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது இந்துக்களின் ஐதீகம்... அதனால், தனது கோரிக்கையை எழுதி அங்குள்ள மரத்தில் கட்டிவிட்டு சென்றார் துர்கா. இப்படி எல்லா கோயில்களுக்குமே சென்று வழிபாடு நடத்தியபடியே வருகிறார்.

    பகிரங்கம்

    பகிரங்கம்

    ஆனால், கோயில்களுக்கு செல்வதை அவர் மறைத்து வைத்து கொண்டதே இல்லை, பகிரங்கமாகவே தன் பக்தியை பல இடங்களில் அவர் பிரகடனப்படுத்தியே வந்துள்ளார்.. கருணாநிதி இறந்தபோது, ஜோசிக்காரர் பாலாஜி ஹாசனை சந்தித்து, ஸ்டாலினின் ஜாதகத்தை தந்து, அவர் முதல்வராக வாய்ப்பு இருக்கிறதா என்றுகூட துர்கா ஏற்கனவே கேட்டதாக ஒரு செய்தி வந்தது.. அது தொடர்பாக போட்டோக்களும் வெளியாகின.. ஆரம்பத்தில் இருந்தே தன் கணவன் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பது ஒரு மனைவியின் இயல்பான ஆசை.

    மகன் அரசியல்

    மகன் அரசியல்

    இப்போது மகனும் தீவிர அரசியலில் இறங்கி விட்டதால், ஒரு பெற்ற தாயின் சராசரி பரிதவிப்புகள் அனைத்தும் வேண்டுதல்களில்தான் போய் முடியும்.. இது யதார்த்தம்.. இது எல்லார் வீடுகளிலும் உள்ள நடைமுறைதான். வழக்கமான ஒன்றுதான்.. அதைதான், மறுபடியும் துர்கா செய்து வருகிறார். ஆனால், கருணாநிதி இறந்த பிறகுதான் துர்கா கோவிலுக்கு செல்வது அதிகமாகி இருக்கிறது என்ற பேச்சையும் மறுக்க முடியாது.

    கோயில்

    கோயில்

    எனினும், கருணாநிதி வீட்டில் யாருமே கோயிலுக்கு செல்ல மாட்டார்கள் என்ற கருத்து பொதுவாகவே தமிழகத்தில் தங்கிவிட்டது.. அதனால்தான் துர்கா கோயிலுக்கு போகும்போதெல்லாம் சர்ச்சைகளும் கூடவே போகின்றன.. துர்கா ஸ்டாலின் மட்டுமல்ல, ராஜாத்தி அம்மாளும் மகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு சென்றவர்கள்தான்.. இதை கனிமொழியும் மறுத்ததில்லை.

    தார்மீக உரிமை

    தார்மீக உரிமை

    எல்லாவற்றிற்கும் மேலாக, சாமி கும்பிடுவதும், கும்பிடாததும் இது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது.. ஒருவரை போல இன்னொருவர் இருக்க வேண்டிய கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இல்லை.. இது தார்மீக உரிமையும்கூட.. ஆனால் இந்த விஷயத்தை எடுத்து வைத்து கொண்டு, அரசியலாக்கும் முயற்சியில் பலர் இறங்கி வருவது மலிவான விமர்சனத்தையே எதிரொலிக்கிறது.

    English summary
    Durga Stalin visits her kuladeivam temple in Mayiladuthurai district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X