பெரிய "சதி".. எஸ்.பி வேலுமணிக்கு கடிவாளம் போடும் "ஸ்டாலின்"? லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய ரிப்போர்ட்
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்பி. வேலுமணி மீது புகார் உள்ளது.
இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முதல்வர் ஸ்டாலினும் தீவிரமாக கவனம் செலுத்தினார்.

என்ன நடந்தது?
இந்த ரெய்டில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கான்டிராக்டர் திருவேங்கடம் கொடுத்த புகார், திமுக ஆர்.எஸ் பாரதி வழக்கு மற்றும் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்குகளின் விளைவாக முதல் ரெய்டு நடந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறையாக இதே வழக்கின் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 3வது வழக்கு ஒன்றும் எஸ்.பி வேலுமணி மீது போடப்பட்டது.

வழக்கு
கடந்த முறை இந்த ரெய்டின் போது அது தொடர்பான தகவல் முன்பே வேலுமணி தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் அப்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலுமணி கோரிக்கை
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையும் இதில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அளித்துள்ள பதில் மனுவில் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், விசாரணை நடைபெற்று வருகிறது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்துள்ளார். ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அரசு ஒப்பந்தம்
அரசு ஒப்பந்த பணிகளை செய்வதற்காக பி செந்தில் அண்ட் கோ என்ற பெயரில் இவர் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். பதவியை பயன்படுத்தி இவர் டெண்டர்களை முறைகேடாக வழங்கி உள்ளார். வேலுமணிக்கு நெருக்கமானவர்ளுக்கு டெண்டர் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது முழுக்க முழுக்க விதிமீறல். ஏராளமான அரசு பணத்தை அபகரிக்க இவர் மிகப்பெரிய சதி செய்துள்ளார். அதனால் வேலுமணி மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications