சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் சொல்வது உண்மை?.. லஞ்ச ஒழிப்புத்துறை ஒன்று சொல்ல.. விஜயபாஸ்கர் வேறொன்று சொல்கிறாரே.. குழப்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் தனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று ரெய்டு நடத்தப்பட்டது. சென்னை வீடு உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில் 32, திருச்சியில் 4, மதுரையில் 1, கோவையில் 2, காஞ்சிபுரத்தில் 1, செங்கல்பட்டில் 2, சென்னையில் 8 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதோடு விஜயபாஸ்கர் மனைவி ரம்யா மீதும் இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச ஒழிப்புத்துறை


நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை விஜயபாஸ்கர் மீது எப்ஐஆர் பதிவு செய்தது. லஞ்ச ஓழிப்பு சட்டம் 1988ன் கீழ் 109 IPC r/w 13(2), 13(l)(c) பிரிவுகளில் வழக்கு. லஞ்ச ஓழிப்பு சட்ட திருத்தம் 2018ன் கீழ் 13(2) r/w 13(l)(b), 12 r/w 13(2) r/w 13(l)(b) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆரில் இருக்கும் தகவலின்படி, 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் வருமானம் இருப்பதாக விஜயபாஸ்கர் தனது தேர்தல் வேட்பு மனுவில், வருமான வரித்துறை கணக்கிலும் கணக்கு காண்பித்துள்ளார்.

வழக்கு

வழக்கு

2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.58 கோடி வருமானம் இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். அதோடு செலவு போக 51 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதே வருமான வரி கணக்கில் ரூ.34 கோடி செலவு செய்ததாக கணக்கு காண்பித்துள்ளார். இதனால் கணக்குபடி அவர் செலவு போக 24 கோடி ரூபாய்க்கு மட்டும்தான் சொத்துக்கள் வாங்கி இருக்க முடியும். ஆனால் தனக்கு 51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக சொத்து கணக்கு காட்டி இருக்கிறார். இதனால் மீதமுள்ள 27 கோடி ரூபாய் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்று இந்த எப்ஐஆரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கேள்வி

கேள்வி

இதை அடிப்படையாக வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டின் முடிவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், அதிமுகவிற்கு இது சோதனையான காலகட்டம். கட்சியில் எனக்கு உறுதுணையாக இருக்கும் எல்லோரும் நன்றி. எனக்கு எதிரான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் நான் முறையாக சட்டப்படி எதிர்கொள்வேன். நாங்கள் 98ல் அறக்கட்டளை தொடங்கினோம். 18 வருடமாக எனது சகோதரர் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இப்போது எதோ கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

பொய்

பொய்

அதெல்லாம் உண்மையில்லை . அதோடு நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள். அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் வெளியிடுங்கள். என்னுடைய இல்லத்திலும் இன்னும் சில இடங்களிலும் ரெய்டு நடக்கிறது. எனது வீட்டில் இருந்து பணமோ, பொருளோ பறிமுதல் செய்யப்படவில்லை. நான் முறையாக வருமான வரி கணக்கு காட்டி இருக்கிறேன். இதனால் எனக்கு கவலை இல்லை.

 வேட்பு மனு

வேட்பு மனு

வேட்புமனுவில் நான் வெளிப்படையாக் தகவல்களை வெளியிட்டு இருக்கிறேன். அதை வைத்துதான் ரெய்டு நடத்துகிறார்கள். அதற்கான விளக்கத்தை நான் கொடுப்பேன் என்று என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்து எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று நேற்று இரவு அளித்த பேட்டியில் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். ஆனால் அவரின் வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச ஒழிப்புத்துறை


லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், விஜயபாஸ்கர் வீட்டில் பின் வரும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பணம் - 23,85,700 ரூபாய்

தங்க நகைகள் -4870 கிராம்

கனகர வாகனங்கள் -136 வாகன பதிவு சான்றிதல்கள்

சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள்

வழக்கிற்கு தொடர்புடைய பணம் - 23,82,700 ரூபாய்

ஹார்ட் டிஸ்க்குகள் - 19

மற்ற முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குழப்பம்

குழப்பம்

அதாவது ஒரு பக்கம் விஜயபாஸ்கர் தனது வீட்டில் இருந்து பணமோ, பொருளோ பறிமுதல் செய்யப்படவில்லை. நான் முறையாக வருமான வரி கணக்கு காட்டி இருக்கிறேன். இதனால் எனக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னொரு பக்கம் ரொக்கம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை விவரமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைக்கு இடையில் ஏன் இப்படி விஜயபாஸ்கர் மறுத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 கைப்பற்றினார்கள்

கைப்பற்றினார்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை இவ்வளவு சொத்துக்களை பறிமுதல் செய்ததாக விவரம் வெளியிட்டுள்ள நிலையில் விஜயபாஸ்கர் ஏன் ஊடகத்திடம் மாற்றி பேசினார்.. யார் சொல்வதுதான் உண்மை என்ற கேள்வி எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு பக்கம் அறிக்கை வெளியிட அதற்கு எதிர்மாறாக விஜயபாஸ்கர் இன்னொரு பக்கம் பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக விஜயபாஸ்கர் கூறி உள்ள நிலையில், இந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
DVAC Raid: Confustion over the seized money and gold from EX minister Vijayabaskar house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X