Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒற்றைத்தலைமையை தடுக்க ரெய்டு..அதிமுகவில் திமுகவின் "ரகசிய நண்பர்கள்".. இன்பதுரை பரபர குற்றச்சாட்டு

ஒற்றை தலைமை வந்தால் திமுகவுக்கு ஆபத்து என்பதால் அதிமுகவிலுள்ள திமுகவின் ரகசிய நண்பர்கள் மூலம் ரெய்டு நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ரகசிய உறவு வைத்துள்ளவர்களுடன் இணைந்து ஒற்றைத்தலைமை உருவாவதை முறியடிக்க நினைக்கிறார்கள் என்று திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். பொதுக்குழுவை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்தது தற்போது நடந்து வருவதாகவும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ADMK முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை... என்ன காரணம்? *Politics

    முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, அவர்களது நண்பர்கள் வீடு என 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரேஷன் கடைகளுக்கு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கடந்த அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்த புகாரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    காமராஜ் வீட்டில் ரெய்டு

    காமராஜ் வீட்டில் ரெய்டு

    முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 2015 முதல் 2021 வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதுடன், பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது பெயரிலும், குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் சொத்துகளை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    பழிவாங்கும் நடவடிக்கை

    பழிவாங்கும் நடவடிக்கை

    இந்த நிலையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, விசாரணையின் போது அவர்களை கண்ணியமாக நடத்துகிறார்களா என்று பார்க்கும் உரிமை தனக்கு உள்ளதாக கூறினார். அதை அனுமதிக்க வேண்டிய கடமையும் காவல்துறையினருக்கு உள்ளது. யாருமே என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் இது சட்டப்படி தவறு. அரசியல் ரீதியாக இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

     ஒற்றைத்தலைமை

    ஒற்றைத்தலைமை

    திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுகதான். அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடமே வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத்தலைமை உருவானால் அது தங்களுக்கு ஆபத்தாகி விடும் என்று திமுக திடமாக நம்புகிறது.

     ரகசிய உறவு

    ரகசிய உறவு

    எனவேதான் அதிமுகவில் ரகசிய உறவு வைத்துள்ளவர்களுடன் இணைந்து ஒற்றைத்தலைமை உருவாவதை முறியடிக்க நினைக்கிறார்கள். எனவேதான் திமுக அரசு நேரடியாக இறங்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
    நான் சாதாரணமாக வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ என்று சாதாரணமாக குற்றம் சாட்டவில்லை. அதற்கு ஆதாரம் உள்ளது.

    ரெய்டுக்கு காரணம் என்ன?

    ரெய்டுக்கு காரணம் என்ன?

    சில தினங்களுக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத், அதிமுக பொதுக்குழு நடைபெறாமல் தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றார். தமிழக அரசும் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று சொன்னார் ஓ.பி. ரவீந்திரநாத். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஒபிஎஸ் தரப்பிற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறாமல் தடுக்க திமுக அரசினால் எப்படி முடியும் என்று யோசித்தோம். ஏனென்றால் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. அப்படி இருக்கும் போது வரும் 11ஆம் தேதி பொதுக்குழு பணிகளை செய்து வரும் காமராஜ் வீட்டில் தற்போது ரெய்டு நடைபெறுகிறது.

    திமுக பின்னணி

    திமுக பின்னணி

    ஒற்றைத்தலைமை உருவாகக் கூடாது என்பதன் பின்னணியில் திமுக உள்ளது. எனவேதான் தற்போது காமராஜ் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடக்கிறது. அதிமுகவிலேயே திமுகவின் ரகசிய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவேதான் அவர்களை தவிர்த்து விட்டு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர முயற்சி செய்கிறோம். காமராஜ் மீது போடப்பட்ட இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம். காமராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினஅடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் திமுகவை நாங்கள் வலுவாக எதிர்ப்போம் என்றும் வக்கீல் இன்பதுரை தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+