வழக்கமான பரிசோதனை.. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்!
ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: இன்று மாலை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.
Recommended Video
ஆஞ்சியோ சிகிச்சை பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். காலையில் இருந்து அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. 2018-ல் கோவை கணமதி காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், ஸ்டீம் பாத், எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் தரப்பட்டன. இதற்காக ஒரு வாரம், 5 நாட்கள் என பலமுறை கோவை ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ சிகிச்சை தொடர்பான பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை பரிசோதனை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும் சென்று துணை முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார். வழக்கமான சோதனைகள் முடிந்த நிலையில் அவர் வீடு திரும்பினார்.
நாளைய தினம் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications