சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் அடுத்த மாதம் முதல் இ பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள் அறிமுகம்

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் அடுத்த மாதம் 500 இ- பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

நாடு முழுவதும் இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. . இதன்படி சைக்கிள் பாதை மற்றும் நடைபாதைகள் நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் அதிக அளவில் அமைக்கப்பட உள்ளது.

E-bike and next generation bicycle to be launched in Chennai from January

இதன்படி, சென்னையில் தற்போது 50க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டுளளன.. இதில் 500 சாதாரண சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது.

இதனிடையே சென்னையில் ஸ்மார்ட் பைக் நிறுவனம் மூலம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் இ - பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்களை அறிமுகம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

சங்கரன்கோவிலுக்கு முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி 23-இல் கடையடைப்புசங்கரன்கோவிலுக்கு முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி 23-இல் கடையடைப்பு

.ஸ்மார்ட் பைக் நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் புதிய 500 இ-சைக்கிள்கள் மற்றும் செயின் இல்லாத 500 அடுத்த தலைமுறை சைக்கிள்கள் சென்னையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இதன் மூலம் சென்னையில் மொத்தம் 1500 சைக்கிள்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் சைக்கிளுக்கு பழைய கட்டணமும், இ - பைக் வகையைச் சேர்ந்த சைக்கிளும் புதிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த வசதிகளை மக்கள் எளிதில் அணுகுவதற்காக சென்னையில் 150 சைக்கிள் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு சைக்கிள் நிலையங்களிலும் அனைத்து சைக்கிள்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Chennai Corporation officials said that 500 e-bikes and next generation bicycles will be launched in Chennai next month. 150 bicycle stations are to be set up in Chennai to make these facilities easily accessible to the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X