"பச்சை துரோகம்".. ஸ்டாலினை சீண்டிய பாஜக.. சொன்னது நீதானா "நாராயணா".. இது நியாயமா.. திரண்ட திமுகவினர்

நாராயண் திருப்பதி திமுகவை விமர்சித்து ட்வீட்களை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் திமுகவை சீண்டி, சினிமா பாட்டிலேயே கேள்விகளை நறுக்கென எழுப்பி உள்ளார் தமிழக பாஜகவின் துணை பொதுச்செயலாளர் நாராயணன் திரப்பதி.

ஒரு கட்சியை விட சிறப்பாக செயலாற்றி, அரிய பல திட்டங்களையும் அறிவித்து, மக்களின் மனதில் இடம் பிடிப்பது ஒரு வகை.. குற்றம் கண்டுபிடித்தே, சம்பந்தப்பட்ட கட்சியை டேமேஜ் செய்வது மற்றொரு வகை.

இப்படிப்பட்ட அரசியல்தான் தற்போது தேசிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நம் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல..

 புது டெக்னிக்

புது டெக்னிக்

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான குற்றச்சாட்டை திமுக சொன்னால், திமுகவின் இன்றைய ஆட்சியை பாஜக விலாவரியாக விமர்சித்து கொண்டிருக்கிறது.. அதிலும் தமிழக பாஜகவின் நாராயண் திருப்பதி புது டெக்னிக் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.. கடந்த முறை அதிமுக ஆட்சியை, திமுக என்னவெல்லாம் குறை சொல்லி அறிக்கை விட்டதோ, அதையெல்லாம் கிண்டி எடுத்து வெளியே கொண்டு வந்து, அதை திமுகவிடமே திருப்பி தந்து தரும் டெக்னிக்தான் அது.

 சுபஸ்ரீ பாவம்

சுபஸ்ரீ பாவம்

சென்னையில் அன்று பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தபோது, திமுக தலைவரான ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? 2019, செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ மரணத்தின் போது இந்த விமர்சனங்களை முன் வைத்தவர் அன்றைய தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு @mkstalin அவர்கள்" என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

 விக்னேஷ்

விக்னேஷ்

இந்த பழைய ட்வீட்டை, பாஜக நாராயணன் இன்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு, "சொன்னது நீதானா சொல் சொல் சொல் .......சம்மதம் தானா?" என்று கேட்டிருந்தார்.. அதேபோல, அன்று பென்னிக்ஸ் விவகாரத்தில், லாக்கப் மரணம் குறித்து, ஸ்டாலின் கண்டித்து ட்வீட் போட்டிருந்தார்.. அந்த ட்வீட்டை, மறுபடியும் பதிவிட்ட நாராயணன், தற்போது திமுக அரசில் லாக்கப் மரணமடைந்த விக்னேஷை குறிப்பிட்டு , "சொன்னது நீதானா சொல் சொல்" என்று கேட்டிருந்தார்.

 எ.வ. வேலு

எ.வ. வேலு

இப்போதும், இதே கேள்வியை கேட்டுள்ளார் நாராயணன்.. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.. "இன்று ஒரு குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கார் வைத்திருக்கும் நிலை உருவாகிவிட்டது.. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், சாலை விரிவாக்கம் அவசியமாகிறது.. சாலை விரிவாக்கம் என்று போனால், நிலமே இல்லாதவர்கூட பச்சை துண்டை போட்டுக் கொண்டு, நிலத்தை பறிக்காதே என போராட தொடங்விடுவிகின்றனர் என்று அதிமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் இப்படி கூறியிருக்கிறார் போலும்.

 பச்சை துரோகம்

பச்சை துரோகம்

ஆனால், இந்த விஷயத்திலும் என்ட்ரி தந்துள்ள நாராயண், "சொன்னது நீ தானா சொல் ...சொல் ....,சொன்னது இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள். நியாயமா? இது நியாயமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், 2020-ல் பதிவிட்ட 2 ட்வீட்களையும் ஞாபகமாக தேடிப்பிடித்து எடுத்து கொண்டு வந்துவிட்டார்.. அதில், ஸ்டாலின் பச்சை துண்டு அணிந்து விவசாயிகளை சந்தித்தபோது, நாராயணன் அதை விமர்சித்து இந்த ட்வீட்களை போட்டுள்ளார்.. அதைதான் இப்போது மறுபடியும் பதிவிட்டுள்ளார்..

 பச்சை துண்டு

பச்சை துண்டு

அதில், "தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்லும் முதல்வர் விவசாயி அல்ல, விவசாயி என்று சொல்லி ஏமாற்றும் விஷவாயு என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறன்.. பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் என்று கூறியுள்ளார். இந்த பதிவிற்கு வழக்கம்போல் திமுகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.. அப்படின்னா, விவசாயிகளை கார் ஏற்றி கொன்றது யாரு? என்ற கேள்வி முதல் பல்வேறு கருத்துக்களை பாஜகவுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+