நொடிக்கு நொடி.. மீண்டும் மின்வாரியம் அதிரடி..தாறுமாறா எகிறும் மின்கட்டணம்.. தமிழக அரசு மாஸ் திட்டம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், கரண்ட் பில் கணக்கீட்டில் புது மாறுதல் துவங்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கையில் எடுத்து வருகிறது.. என்ன அது?
தமிழகத்தில், மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக சமீபத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு: இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் துல்லியமாக கணக்கெடுத்துவிடும். ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. அதற்கான கட்டண விவரம் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை விரைவில் ஆரம்பமாக உள்ளது
.

அதேபோல, இன்னொரு தகவலும் கடந்த வாரம் வட்டமடித்தது... தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, தாறுமாறாக காட்டும் மீட்டர்களுக்கு முடிவுகட்ட வீடுகளில், "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டம் உள்ளதாம்.
செல்போன்கள்: வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போன்களுக்கும், இந்த தகவல்கள் அனுப்பப்படும் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்
இந்நிலையில், இன்னொரு வசதியையும் மின்துறை கொண்டுவரப்போகிறது.. அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள்.. சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாம்.
புது செயலி: பல கட்ட ஆய்வுக்கு பிறகு இப்போதுதான், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செயலியை அடுத்த வாரமே அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்திருக்கிறதாம்.
அதன்படி, மொபைல் செயலி, ஊழியர்களின் செல்போனில் டவுன்லோடு செய்யப்படும். அதனுடன் ஒரு, "ஆப்டிகல் கேபிள்" வழங்கப்படும். கணக்கெடுக்கும்போது ஒயரை மீட்டரில் செருகி, போனுடன் இணைத்துவிட்டால் போதும்.. இப்போது செயலியை இயக்கியதும் மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும்.
நொடிக்கு நொடி: முதல்கட்டமாக, உதவி பொறியாளர்களின் போனில் மொபைல் செயலி சேவையை பதிவேற்றம் செய்து தாழ்வழுத்த பிரிவு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் கணக்கெடுக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கு பிறகே, வீடுகளுக்கு இந்த செயலியை செயல்படுத்தப் போகிறார்களாம். இதனால், உடனுக்குடன், அதாவது அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் கிடைத்துவிடும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications