நானும் நீதிபதிதான்.. தொலைச்சிப்புடுவேன்.. பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய அதிகாரி- காப்பு மாட்டிய போலீஸ்!
சென்னை : அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம், தான் ஒரு நீதிபதி எனக் கூறி மிரட்டல் விடுத்த தாம்பரம் மின்வாரிய அதிகாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தை சேர்ந்த கபிலர் என்பவரின் மகன் நெப்போலியன். இவர் மீது அவரது மனைவி மேனகா அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வரதட்சணை புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கு தொடர்பாக விசாரித்த அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அத்துமீறி நுழைந்த நெர்ப்போலியனின் அப்பா கபிலர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி
நெப்போலியனின் மனைவி மேனகா தனது புகாரில், நெப்போலியன் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், 100 பவுன் நகை ஒரு கார் வேண்டும் எனக் கேட்டு மிரட்டுவதாகவும் அந்த வரதட்சணை புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, நெப்போலியன் மனைவி மேனகா அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நானும் நீதிபதிதான்
அதன் பேரில் நெப்போலியன், அவரது தந்தை கபிலர் மற்றும் அவரது தாய் ஆகியோர் மீது வரதட்சணை புகார் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி கடந்த 5ஆம் தேதி ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கபிலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மகளிர் ஆய்வாளர் ஜோதிலட்சுமியை பார்த்து, 'என் குடும்பத்தார் மீது நீ வழக்குப் பதிவு செய்யக்கூடாது. நான் யார் தெரியுமா? தொலைச்சிப்புடுவேன். நானும் நீதிபதி தான். விஜிலென்ஸில் நீதிபதியாக இருக்கிறேன்" என்று கூறி காவல் ஆய்வாளரை மிரட்டியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க முயற்சி
அவ்வாறு கபிலர் மிரட்டல் விடுத்தபோது அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மது போதையில் காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து மிரட்டியதால் மகளிர் ஆய்வாளர் ஜோதிலட்சுமி கபிலர் மீது உடனடியாக அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையில், ஆய்வாளர் ஜோதிலட்சுமியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கபிலர், அவருக்கு 10,000 ரூபாய் கொடுப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தனது மகன் நெப்போலியனை விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

செல்போன் நம்பர் மூலம்
இந்நிலையில், செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கபிலரின் செல்போன் எண்ணை வைத்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வேலூரை அடுத்த ராணிப்பேட்டை நெமிலி சாலையில் உள்ள பானாவரம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் கபிலர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து அம்பத்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications