சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.. "இரும்பு மனிதர் அமித்ஷா.. நாட்டை வல்லரசாக்குகிறார் மோடி".. நச் ட்வீட்

எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

2022ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்... அந்தவகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருமே தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்திருந்தனர்..

கரகாட்டம் -ஒயிலாட்டம் -மயிலாட்டம்! 10,000 பொங்கல் பானைகள்! 22 மேடைகள்! மோடி மதுரை விசிட் ஸ்பெஷல்! கரகாட்டம் -ஒயிலாட்டம் -மயிலாட்டம்! 10,000 பொங்கல் பானைகள்! 22 மேடைகள்! மோடி மதுரை விசிட் ஸ்பெஷல்!

 வாழ்த்து செய்தி

வாழ்த்து செய்தி

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட மறையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இது தொடர்பான செய்தியில், "இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று உலகளவில் வல்லரசாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் , மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 இரும்பு மனிதர்

இரும்பு மனிதர்

அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை எடப்பாடி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "நவீன இந்தியாவின் இரும்பு மனிதராய் திகழும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்... தலைவர்களுக்கு பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவிப்பது என்பது இயல்பான ஒன்றுதான்.. அதேசமயம், பாஜகவுக்கு இணக்கமான போக்கையே எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக கையாண்டு வருகிறார்.

 திமுக ஆட்சி

திமுக ஆட்சி

குறிப்பாக, எங்கு பேசினாலும் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று சொல்லி கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது, ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதனால் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது... ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக தன்னுடைய ஆதரவை தெரிவித்தது..

 கொள்கை

கொள்கை

இப்போதும் பாஜகவின் அதே கொள்கையை அதிமுக முன்னெடுத்துள்ளது.. அப்படியானால், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் வரும்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வருமா என்று தெரியவில்லை.. ஆனால், பாஜகவின் கூட்டணியில் அதிமுக நெருங்கி உள்ளது என்பது மட்டும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் சமீபகாலமாக தென்பட்டு வருகிறது..!

English summary
Edapadi Palanisamy New year wishes to PM Modi and home minister Amitsha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X