சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லா பக்கமும் அணை கட்டும் பிரச்சினைகள்.. தீவிர ஆலோசனையில் அதிமுக தலைவர்கள்!

ஆட்சியை காப்பாற்றி கொள்ள அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எல்லா பக்கமும் அணை கட்டினால் என்னதான் செய்யறது? தீவிர ஆலோசனையில் அதிமுக தலைவர்கள்

    சென்னை: எல்லா பக்கமும் அணை கட்டினால் என்னதான் செய்யறது? அதான் அதிமுக மூத்த தலைவர்கள் உட்கார்ந்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்களாம்!

    எம்பி தேர்தலின்போது அதிமுகவுக்கு இருந்த வேகம், இடைத்தேர்தலில் குறைந்துதான் காணப்படுகிறது. ஆனால் திமுகவோ இடைத்தேர்தலுக்கு முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது!

    பிரச்சார பயணத்தை அறிவித்ததுடன், ஓட்டப்பிடார வீதிகளில் திண்ணை பிரச்சாரங்களில் ஈடுபட்டார் ஸ்டாலின்.

    சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு

    இரட்டை இலை

    இரட்டை இலை

    இதே வேகம்தான் அமமுகவும் காட்டியது. திமுகவுக்கு அடுத்ததாக அமமுக வேட்பாளர்களை அறிவித்தது. அமமுகவை கட்சியாக பதிவு செய்து அங்கீகாரத்தை வெளிப்படுத்தியது. அதிமுக உரிமை கோரும் வழக்கு. இரட்டை இலை மேல்முறையீடு என அடுத்தடுத்த வேலைகள் துவங்கின.

    ரகசிய வேலை

    ரகசிய வேலை

    இதனிடையே ஏற்கனவே அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் சத்தமே இல்லாமல் திமுக, அமமுக பக்கம் சாய யோசித்து வருகிறார்கள். அப்படி யோசனையே வராதவர்களைகூட தங்கள் தரப்பில் இழுத்து போடும் வேலைகளும் ரகசியமாக நடந்து வருகிறது.

    அப்பீல்

    அப்பீல்

    இதெல்லாம் பார்த்துதான் 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் திமுக தரப்பு அசராமல் அப்பீல் சென்றது. 3 எம்எல்ஏக்களும் பதவியை காப்பாற்றி கொள்ள பயந்து நடுங்காமல் துணிந்து பேட்டி தந்து வருகிறார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக தங்க தமிழ்செல்வன், "திமுகவுடன் இணைந்து அதிமுகவுக்கு முடிவு கட்டுவோம்" என்று சொல்லவும் அதிமுக கூடாரம் பீதியில் ஆழ்ந்துவிட்டதாம்!

    குரலை உயர்த்துவார்கள்

    குரலை உயர்த்துவார்கள்

    ஏனென்றால், எம்பி தேர்தல் ஒரு பக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் இப்போதைக்கு அதிமுகவுக்கு முக்கியம். ஒருவேளை இதில் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், அதிமுகவுக்கு இன்னும் சிக்கல் ஏற்படும். இப்படியா, அப்படியா என்று தடுமாற்றத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக அணி தாவல் நடவடிக்கையில் இறங்கி விடுவார்கள் என்றே தெரிகிறது.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அது மட்டும் இல்லை.. சீட் கிடைக்காத மூத்த தலைகள் கண்டிப்பாக குரலை உசத்துவார்கள். கட்சிக்குள் மோதல் வெடிக்கும். அதனால் இது எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான். இதையெல்லாம் சமாளிக்கதான் அதிமுக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

    அமமுக திட்டம்

    அமமுக திட்டம்

    ஒரு பக்கம் திமுக கொண்டு வர போகும் ஆட்சி கவிழ்ப்பு விவகாரம், மறுபக்கம், இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற அமமுகவின் திட்டம், இதனிடையே திமுக, அமமுக இரண்டும் சேர்ந்தால்,அதை எப்படி சமாளிப்பது என்பன குறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனராம்!

    English summary
    CM Edapadi Palanisamy has disscussed with TN Ministers to save the Regime
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X