முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுங்கள்.. எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல் துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங். முதலமைச்சர் ஸ்டாலின் ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெரிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

Edappadi Palanisamy demands Tamilnadu government to withdraw case against R.Natraj IPS

தி.மு.க. ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் நமது
@AIADMKITWINGOFL சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒருசில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் மந்திரிகள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணய குழு முன்னாள் தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) அவர்கள் மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது.

காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன: சென்னை மயிலாப்பூரில் இன்று நடந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் திமுக இளைஞர் அணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்வதாக குற்றம்சாட்டினார்.

ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி அவரது சொந்த வாட்ஸ் ஆப் கணக்கில் இருந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அவரது பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என நான் சொல்லியதாக ஒரு செய்தியை அவர் போட்டுள்ளார். இந்து ஓட்டுக்கள் இல்லாமலேயே நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என நான் சொன்னதாக ஒரு வாட்ஸ் ஆப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு போலீஸ் அதிகாரி அதுவும் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் இப்படி பேசியிருக்கிறார். அவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+