எதிராகத் திரும்பிய அம்பு.. ஓபிஎஸ் கேப்சர் பிளானை தங்களுக்கு சாதகமாக எடுத்த ஈபிஎஸ் டீம்.. போச்சே!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமைக் கழகத்தை கைப்பற்றப் போட்ட திட்டம், அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களால் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
Recommended Video
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - எடப்பாடி தரப்பினர் இடையே நடந்த களேபரத்தில் அதிமுக தலைமை அலுவலகமே போர்க்களமானது. கட்சிக் கொடிகள், பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகத்தில் அத்துமீறியவர்களை ஓ.பன்னீர்செல்வம் ஊக்குவித்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு
பரபரப்பான சூழலில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பங்கேற்பில் இன்று காலை கூடியது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச்செயாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் செய்த செயல்
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் இன்று காலையில் புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர். இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர். இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் கற்கள் கொண்டு மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் படுகாயமுற்றனர்.

ஓ.பி.எஸ் கட்டுப்பாட்டில்
அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து உள்ளே சென்றனர். ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழகத்தின் உள்ளே நுழைந்து, பேனர்களில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். அலுவலகத்திற்குள்ளும் புகுந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். கட்சி அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் கட்டுப்பாட்டில் வந்தது.

ரத்தக்களறி
ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது. இதனால் அவரது கையில் ரத்தம் வடிய, அதிமுக கொடியால் கட்டுப்போட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கல்வீச்சு, கார்கள் உடைப்பு சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகமே போர்க்களமானது. வானகரத்தில் பொதுக்குழு தொடங்கிய நேரத்தில் ராயப்பேட்டை ரத்தக்களறியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு வெடித்த வன்முறையை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

குற்றம்சாட்டும் ஈபிஎஸ் தரப்பு
அதிமுக தலைமைக் கழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும், கோவில் போல கருதவேண்டிய கட்சியின் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் நாசமாக்கி விட்டார் என்கிற ரீதியில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் மீதான கோபத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கமணி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணி, பொதுக்குழுவில் அவர்களுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வருவதை விட்டுவிட்டு, கோடரியை எடுத்து தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே செல்கின்றனர். அவர்கள் உண்மையான அதிமுக தொண்டர்களா? நாம் தலைமைப் பொறுப்புக்கு வரவில்லை என்றால், இந்த இயக்கமே அழிந்துவிட வேண்டும் என அவர்கள் திமுகவின் துணையோடு நடத்தும் நாடகம் இது எனச் சாடினார்.

ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போதும் இந்த விஷயத்தை பிரதானமாக முன்வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் தரம் தாழ்ந்துள்ளது. அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. திமுகவின் பி டீமாக ஈனத்தனமான செயல்களை செய்துள்ளார் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வம் செய்த செயலை யாரும் ஏற்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

எதிராகத் திரும்பியதா?
பொதுக்குழுவை கூட்டி ஈபிஎஸ் பொதுச் செயலாளராக திட்டமிட்ட நேரத்தில், கட்சி அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தனது ஆதரவாளர்களைத் திரட்டி ஓபிஎஸ் செய்த சம்பவம் ரத்தக்களறியாக முடிந்த நிலையில், அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, திட்டமிட்டு வன்முறையை உருவாக்கியதாக ஓபிஎஸ்ஸை கடுமையாகச் சாடி வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.

தொண்டர்களும் அதிருப்தி
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இன்றைய களேபரத்தால் அடிமட்டத் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பினர் அடாவடியாக அலுவலகத்திற்கு புகுந்து கட்சியின் உடைமைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதை தொண்டர்கள் ரசிக்கவில்லை. இதை அறிந்துகொண்டுள்ள ஈபிஎஸ் தரப்பு, இந்நிகழ்வை முன்னிறுத்திப் பேசி ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகிறது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications