Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கியது சிபிசிஐடி.. கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முக்கியமான கட்டத்தை சிபிசிஐடி எட்டி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டு அரசியலை அதிர வைத்து.. இப்படியெல்லாம் கூட கொலைகள் நடக்குமா என்று யோசிக்க வைத்த சம்பவம் என்றால் அது கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம்தான். ஒரு கொள்ளை.. அதை செய்வதற்கு ஒரு கொலை.. அதை செய்தபின் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் வரிசையாக கொலை செய்யப்படுவது என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கின.

Edappadi Palanisamy is under the radar in the Kodanadu Case: Is CBCID very close the finishing the case?

ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.

இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி பேட்டி: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் இப்போது எழுந்துள்ள பரபரப்பிற்கு காரணம் என்கிறார்கள் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.,

கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன; எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது வழக்கில் பெரிய திருப்பத்தை அவருக்கு எதிராக ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

நெருங்கிய சிபிசிஐடி: இந்த நிலையில்தான் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முக்கியமான கட்டத்தை சிபிசிஐடி எட்டி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே , கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஆத்தூரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புறவழிச்சாலைகளை இணைக்கும் இடத்தில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன. அது எப்போது அமைக்கப்பட்டது என்ற விவரத்தை எடுத்துள்ளனர்.

கனகராஜ் விபத்தில் சிக்கிய 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி விபத்து நடந்த சிறிது நேரத்தில் வேகத்தடையில் பைக்கில் வந்த ஒருவர் விழுந்து காயம் அடைந்ததாக ஒரு தகவல் பதிவாகியிருக்கிறது. அவர் யார் என்பது குறித்து விசாரிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் வேகத்தடைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் யார் யார் இந்த நகராட்சி பகுதியில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்கிறார்கள்.. வேகத்தடை எப்போது அமைக்கப்பட்டது.. எந்தெந்த பகுதியில் இருக்கிறது... தற்போது எந்த இடத்தில் இருக்கிறது.. என்ற விவரங்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

அது மட்டும் இன்றி நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு தகவல்களை பெற்று ஆவணங்களையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. கோடநாடு கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சிபிசிஐடி மேற்கொண்ட இந்த விசாரணை முக்கியம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+