இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீலா ரோஸ் மீது செம காட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. வாக்கு பதிவுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கின்றன. கடைசி கட்ட பணப்பட்டுவாடா குறித்து நேற்று சீனியர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி.

பூத் கமிட்டிக்கான செலவு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், தினசரி கட்சி நிர்வாகிகளுக்கான செலவுகள் என கணக்கு போடப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய தொகை வந்துள்ளது. இதனை யார் யார் பொறுப்பேற்பது என்பது குறித்தும் சீனியர்களிடம் விவாதித்துள்ளார்.

Edappadi Palanisamy

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகை சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில், மார்ட்டின் கொடுப்பதாக சொல்லப்பட்ட தொகை என்னாச்சு? என ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுந்தது. அப்போதுதான் நினைவு வந்த எடப்பாடி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ்க்கு ஃபோன் அடித்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, தேர்தல் தொகை தொடர்பாக எடப்பாடி கேட்டபோது, லீமாரோஸ் சொன்ன பதிலால் அப்-செட்டாகி போனார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்தத் தேர்தலின் 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறியிருக்கிறது லால்குடி தொகுதி. காரணம், 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்ட்டின் அதிமுக வேட்பாளராக இங்கே களம் காண்கிறார்.திருச்சி மாவட்டத்தின் 'லால்குடி' தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் லீமா ரோஸ், தற்போது தமிழக தேர்தல் களத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்த சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி என்ற அடையாளத்தோடு, 'தமிழகத்தின் பெரும் கோடீஸ்வர வேட்பாளர்' என்ற புதிய மகுடத்தையும் அவர் சூடியிருக்கிறார். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் லீமா ரோஸ் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. அவரது பெயரில் மட்டுமே 139.62 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுக்கு அதிபதியாக, மற்ற வேட்பாளர்களை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருக்கிறார் லீமா ரோஸ்.

பாஜகவில் இருந்த லீமாரோஸ், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, எடப்பாடியை சந்தித்து அவரது தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இவரை அதிமுகவுக்கு அழைத்து வந்தது மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கட்சியில் இணைவதற்கும், போட்டியிட சீட் ஒதுக்கீடு செய்வதற்கும் ஒரு பெரும் தொகையை பார்ட்டி ஃபண்டாக கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அவர் போட்டியிடும் தொகுதிக்கான செலவுகளையும், அதிமுக போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான (தொகுதிக்கு 10 கோடி ) செலவுகளையும் நானே ஏற்கிறேன் என எடப்பாடிக்கு வாக்குறுதி தந்திருந்தார் லீமாரோஸ். சீனியர்களும் இதனை ஏற்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி தொகுதி லீமாரோஸ்க்கு ஒதுக்கினார் எடப்பாடி. தொகுதியில் லீமாரோசின் வாக்கு சேகரிப்பு களை கட்டி வருகிறது.

இந்த சூழலில் தான், அதிமுகவின் 15 தொகுதிகளுக்கான செலவுகளை ஏற்பதாக சொல்லியிருக்கும் லீமாரோசை தொடர்பு கொண்டு, " 15 தொகுதிகளுக்கான மொத்த தொகையையும் அனுப்பி வையுங்கள்" என்று எடப்பாடி கேட்க, "மேற்கு வாங்கத்திலிருந்து தமிழகத்திற்கு பணத்தை எடுத்து வரமுடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. என்ன பண்ணுவது என தெரியவில்லை " என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த பதிலிலேயே அப் செட்டான எடப்பாடி, " அட்லீஸ்ட் திருச்சி மாவட்டத்திலுள்ள தொகுதிகளையாவது நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் " என்று வற்புறுத்த, "எடுத்து வரமுடியவில்லை. இல்லாத போது எப்படி கொடுக்க முடியும். நம்முடைய வேட்பாளர்களை செலவு செய்யச் சொல்லுங்கள். தேர்தல் முடிந்ததும் மொத்தத்தையும் செட்டில் செய்து விடுகிறேன். என்னை நம்புங்கள் " என்று லீமாரோஸ் சொல்ல சொல்ல விக்கித்துப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

"பணம் விவகாரத்தில் எடப்பாடியே செம கறார். அவரையே திக்கு முக்காட வைத்துள்ளார் லீமாரோஸ்" என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமான சீனியர்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+