கவனிச்சீங்களா? பல மாதங்களுக்கு பின்.. எடப்பாடி முகத்தில் தெரிந்த திடீர் மாற்றம்.. அப்போ கன்பார்ம்?
சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக தனது எழுச்சி பயணத்தில் முன்பை விட உற்சாகமாக காணப்படுகிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கட்டுப்பாட்டில் எடுத்ததில் இருந்து வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்து உள்ளார். இதனால் அவரின் பிரச்சாரங்களில் எல்லாம் பெரிதாக உற்சாகம் இன்றி காணப்பட்டார். அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பினார். கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பிரஷர் கொடுத்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணி செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.

கைகோர்க்கும் விஜய் எடப்பாடி
அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக இன்று மக்கள் மத்தியில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
போன் கால் பேச்சு
ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.
மேலும், பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரம் தெரிவித்து . இந்த அழைப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு எடப்பாடி தற்போது மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.
இன்னொரு பக்கம் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தும் வெளியேறினர். இதுவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாக மாறியது. இப்படி பல விஷயங்கள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தனது பயணத்திலேயே அவ்வளவு எழுச்சி இல்லாமல் இருந்தார் .
எடப்பாடி மகிழ்ச்சி
இப்படிப்பட்ட நிலையில்தான் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக தனது எழுச்சி பயணத்தில் முன்பை விட உற்சாகமாக காணப்படுகிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணிக்கு வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் எடப்பாடி முகத்தில் முன்பை விட இப்போது அதிக மகிழ்ச்சி காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications
