"ஒற்றை தலைமை" தீர்மானமா? அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது.. ஹைகோர்ட்டில் எடப்பாடி தரப்பு காரசார வாதம்
சென்னை : 2017ஆம் ஆண்டு பொதுக்குழுவில், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுத்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன என ஓ.பி.எஸ் தரப்பு வாதத்திற்கு பதில் அளித்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்றும் வாதத்தை முன்வைத்துள்ளார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என்ற எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியாது என எதிர்வாதம் வைத்துள்ளது. பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல என்பது கட்சி விதி என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயண் வாதத்தை முன்வைத்துள்ளார்.
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தடை கேட்கின்றனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும். பொதுக்குழுவின் முடிவுகள் கட்சியினரைக் கட்டுப்படுத்தும். பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும், இது ஜனநாயக நடைமுறை.
நாளை நடைபெறும் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்படலாம், அல்லது செய்யப்படாமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம்; இது நடக்கும்; இது நடக்காது என்ற எந்த உத்திரவாதமும் கொடுக்கமுடியாது என்றும் எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கட்சி விதிகளில் திருத்தம் செய்ய யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் போதுமானது என்றும் எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications