சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் கையில் ‘அஸ்திரம்’.. முறியடிக்க எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்.. இன்று 2 பேரை இறக்கியதே அதற்குத்தானா?

Google Oneindia Tamil News

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்னொரு திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

Recommended Video

    அதிமுக நாளிதழில் இருந்து OPS பெயர் நீக்கம்... தொடர்ந்து பறிபோகும் அதிகாரங்கள் *Politics

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏற்கனவே தங்கள் பலத்தைப் பெருக்குவதற்காக சமுதாய ரீதியிலான கேன்வாஸில் இறங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

    ஓபிஎஸ் தரப்பினரின் அந்த முயற்சிக்கு செக் வைக்கும் வகையிலேயே அமைச்சர்கள் இன்று அதிமுக தொண்டர்கள் சாதி ரீதியாக பிளவுபட்டு விடக்கூடாது எனப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    தெரியாமல் செய்த தப்பு.. சட்ட சிக்கலில் மாட்டிய எடப்பாடி.. ஓபிஎஸ் கையில் 8 அஸ்திரம்! வெலவெலத்த அதிமுக தெரியாமல் செய்த தப்பு.. சட்ட சிக்கலில் மாட்டிய எடப்பாடி.. ஓபிஎஸ் கையில் 8 அஸ்திரம்! வெலவெலத்த அதிமுக

    விஸ்வரூபம் எடுத்த விவகாரம்

    விஸ்வரூபம் எடுத்த விவகாரம்

    அதிமுகவின் இரட்டைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் திகழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்து, அந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற ஈ.பி.எஸ் தரப்பும், இரட்டைத் தலைமையாகவே இருக்கவேண்டும், தனது இடம் பறிபோகக் கூடாது என ஓ.பி.எஸ்ஸும் முட்டி மோதி வருகின்றனர். பொதுக்குழுவிலும், இரு தரப்பினர் இடையே மோதல் வலுத்தது.

    ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம்

    அதிமுகவில் தனது இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பாஜக டெல்லி தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்ற ஓபிஎஸ், பயணத்தை முடித்துவிட்டு, நேற்று தமிழகம் திரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் தற்போது முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். மேலும், தமிழகம் முழுக்க தொண்டர்களின் ஆதரவு வேண்டி சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டம் வகுத்து வருகிறார். இதனால், அதிமுக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    சாதி ரீதியாக

    சாதி ரீதியாக

    இதற்கிடையே, அதிமுகவில் எப்போதுமே மேலோட்டமாக இருந்து வரும் சாதிய லாபி, கடந்த சில நாட்களாக வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் தொடர்ச்சியாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். மேலும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அவர்களை சாதி ரீதியாக விமர்சித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதன்மூலம், ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையேயான அதிகார யுத்தம் சாதி ரீதியிலான மோதலாகவும் உருவெடுத்தது.

    ஓபிஎஸ் திட்டம்

    ஓபிஎஸ் திட்டம்

    இந்நிலையில், தனக்கு ஆதரவாளர்கள் குறைவாக இருப்பதால், சாதி ரீதியாக ஒரு பெரும் திரளைக் கூட்டவும் ஓ.பி.எஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏற்கனவே இதற்கான கேன்வாஸில் இறங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பல்வேறு பெயர்களில் உள்ள சாதி அமைப்புகளின் ஆதரவையும் தம் பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளும் நடக்கிறதாம். சாதி அடிப்படையில் சசிகலா தரப்பினரோடும் ஒரு இணைப்பை உருவாக்க முடியும் என்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வருகின்றனராம்.

    ஈபிஎஸ் ஆலோசனை

    ஈபிஎஸ் ஆலோசனை

    ஒ.பன்னீர்செல்வம் தரப்பினரும் திட்டமிடல்கள் ஒவ்வொன்றையும் கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏற்றதுபோல், எதிர்வினை ஆற்றி ஓ.பி.எஸ் தரப்புக்கு செக் வைத்து வருகின்றனர். அவர்களின் பதிலடி திட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த சாதி லாபி திட்டமும் தப்பவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டல அமைச்சர்களின் லாபியை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு தங்கள் பக்கம் அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கும் செக் வைக்கும் உத்தியை இறக்கி வருகிறது எடப்பாடி தரப்பு

    சாதி பிரச்சனை

    சாதி பிரச்சனை

    ஓபிஎஸ் தரப்பு தம்மிடம் உள்ள முக்கியமான வெப்பன் ஆக சாதி ஆதரவு விஷயத்தை மறைமுகமாக கையில் எடுத்துள்ள நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சாதி ரீதியாக அதிமுகவினர் பிளவுபடக்கூடாது எனப் பேசத் தொடங்கியுள்ளனர். தென் மாவட்டங்களில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலையில் உள்ள அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் தரப்பினரின் வலையில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக முன்னாள் அமைச்சர்களை இதுதொடர்பாக பேச வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

     செல்லூர் ராஜூ

    செல்லூர் ராஜூ

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அதிமுக தொண்டர்கள் சாதி, மதங்களை காட்டி யாரும் பிரிக்க நினைத்தால் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவர்களாக கொண்டு இயங்கிய கட்சி அதிமுக. சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக" என்று பேசியுள்ளார்.

     பொள்ளாச்சி ஜெயராமன்

    பொள்ளாச்சி ஜெயராமன்

    அதேபோல, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், "அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஏற்பட்ட களேபரத்திற்கு பிறகு, கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி அ.தி.மு.க.விற்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். அ.தி.மு.க எந்த மதத்திற்கும், சாதிக்கும் கட்டுப்பட்டதல்ல. அனைவருக்கும் பொதுவான ஜனரஞ்சகமான கட்சி தான் அ.தி.மு.க" எனப் பேசினார்.

    ஆரம்பத்திலேயே வேட்டு

    ஆரம்பத்திலேயே வேட்டு

    இன்று பேசிய இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பேச்சிலும் சாதி மேட்டர் வெளிப்பட்டது. இப்படியாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கட்டத் திட்டமிட்ட கோட்டைக்கு ஆரம்ப நிலையிலேயே வேட்டு வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இனி வரும் நாட்களில் இது தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகப் பேசப்படும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த முயற்சி, ஓபிஎஸ்ஸுக்கு சாதி ரீதியாக பெருகும் ஆதரவைக் குலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    English summary
    O.Panneerselvam is said to have been involved in mobilizing community support against Edappadi Palanisamy. On other hand, Edappadi Palanisamy faction has begun implementing another plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X