உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! உடனே மைக் ஆஃப் செய்ததால் பரபரப்பு
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதையடுத்து அவருடைய மைக் ஆஃப் செய்யப்பட்டது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மேகதாது அணை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசும் போது "முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டக் கூடாதுனு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூங்க போய்விடுவார், மானே தேனே பொன்மானே என முதல்வர் விஜய் சொன்னாரே" என சொன்ன போது சபாநாயகர் குறுக்கிட்டு தீர்மானத்தில் உள்ளதை பற்றி மட்டும் பேசுங்கள், நீங்கள் பேசுவதை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் . மற்றவைகளை பேச மானியக் கோரிக்கையின் போது நேரம் கொடுக்கிறேன் என்றார்.
உடனே உதயநிதி, "அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்ட மறுக்கிறீர்கள் என்பதுதான் நான் கேட்கும் எளிய கேள்வி! நாங்கள் அழுத்தம் கொடுத்த பிறகு ஜூலை 28ஆம் தேதி பிரதமருக்கு 2வது கடிதத்தை நமது முதல்வர் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் முதல்வராக இருந்த போது கடிதம் எழுதியதை விமர்சித்து இன்று இருக்கும் முதல்வர் என்னென்ன பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டும்.
முதல்வர் பேசியதைத்தான் நான் பேசுகிறேன், அவைக் குறிப்பில் இருந்து நீக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் என உதயநிதி பேசியிருந்தார்.
அப்போது சபாநாயகர், உதயநிதியை பேச நேரம் முடிந்து விட்டது. எனவே தேவையில்லாததை பேச அனுமதிக்க முடியாது என்றார்.
இதையடுத்து அப்போது எடப்பாடி பழனிசாமி , எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார். சபாநாயகர், நீங்கள் கொண்டு வந்த தீர்மானம் முக்கியமானது என்பதால் நான் அனுமதித்தேன், ஆனால் மேகதாது அணையை விட்டுவிட்டு வேறு விஷயங்களை பேசுவதை அனுமதிக்கக முடியாது என தெரிவித்தார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் "எதிர்க்கட்சித் தலைவரை பேசவிடுங்க, அவர் பேசுவதை தடுக்காதீர்கள்" என்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் மைக் ஆஃப் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
