சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் "சப்ஜாடா" முடிஞ்சு போச்சு.. செம ஹேப்பியில் எடப்பாடியார்.. நச்சுன்னு தெறிக்க விட்ட 2 டிவீட்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எல்லா டென்ஷனும் முடிந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நச்சுன்னு 2 ட்வீட்டுகளை தெறிக்க விட்டுள்ளார்.. "தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுகவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்று உறுதி கூறியுள்ளார். இதை பார்த்த அவரது ஆதரவாளர்கள், "எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க... போனதடவ ராஜினாமா பன்னிட்டுதான் நைட் தர்மயுத்தத்துக்கு போனாரு அவரு" என்று எடப்பாடியாரை அலர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே அதிமுகவுக்குள் குடுமிப்பிடி சண்டை நடந்து வந்தது.. எதிர்க்கட்சிகள் என்ன நினைப்பார்கள் என்றுகூட யோசிக்காமல், இரு தரப்பின் கருத்து மோதல்களும் பகிரங்கமாகவே வெளியே தெரிந்தன. நேற்றிரவுகூட விடிய விடிய பேச்சுவார்த்தையை நடத்தி, கடைசியில் இன்று காலையில்தான் ஒரு சுமூக முடிவுக்கு வந்தனர்.

 Edappadi Palanisamy thanks AIADMK and vow to work more hard

இந்த முடிவினை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.. இந்த மகிழ்ச்சியை தன் ட்விட்டரிலும் முதல்வர் பகிர்ந்து கொண்டுள்ளார்.. அடுத்தடுத்து 2 ட்வீட்களை போட்டுள்ளார்.

அதில், "தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்" என்றும், "புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு அவரது ஆதரவாளர்களும், ட்விட்டர்வாசிகளும் வாழ்த்து சொல்லி பாராட்டி வருகின்றனர்.. "அம்மா ஆட்சி போல உங்கள் ஆட்சி சிறந்திடவும், பாஜகவுடன் கூட்டணி ஆட்சியே தமிழ்நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்" என்றும், பெண் ஆளுமையால் உச்சம் தொட்ட அதிமுகவின் வழிகாட்டுத்தல் குழுவில் பெண்கள் இடம் பெறவில்லை.. வேதனை அளிக்கிறது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் கோரிக்கையுடன் ட்வீட்கள் பதிவாகி வருகின்றன.

அதேபோல, "எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க... போன தடவ ராஜினாமா பன்னிட்டுதான் நைட் தர்மயுத்தத்துக்கு போனாரு அவரு" என்று சூசகமாகவும் எடப்பாடியாரை அவரது ஆதரவாளர்கள் அலர்ட் செய்து வருகிறார்கள்.

English summary
Edappadi Palanisamy thanks AIADMK and vow to work more hard
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X