Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலில் விழுந்த பழம்! கைக்கு வராத சாவி! காலம் தாழ்த்தும் அதிகாரிகள்! நீதிமன்றம் செல்லும் எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி , சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    EPS டெல்லி பயணம் ஓபிஎஸ்ஸின் கடைசி நம்பிக்கையும் தகர்கிறதா?

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

    அதிமுகவில் வன்முறை

    அதிமுகவில் வன்முறை

    இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பட்டு ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    அலுவகத்திற்கு சீல்

    அலுவகத்திற்கு சீல்

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. குறிப்பாக அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி , சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்காமல், வருவாய்துறை பெண் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகிறார்கள் என கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத குறையாக கடும் அதிருப்தியில் இருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. நீதிமன்ற உத்தரவுப்படி அலுவலகம் செல்ல ஒரு மாதம் ஆகும் என்றாலும் அதிமுக அலுவலக சாவி தன்னிடம் இருக்க வேண்டுமென அவர் நினைக்கிறார்.

    அவமதிப்பு வழக்கு

    அவமதிப்பு வழக்கு

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாலை 5 மணி அளவில், உயர்நீதிமன்ற உத்தரவை எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் அளித்தும் 'சில அழுத்தத்தால்' அதிமுக அலுவலக சீல் அகற்றம் மற்றும் சாவியை ஓப்படைக்கும் நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்காமல் வருவாய்துறை அதிகாரிகச்ள் காலம் தாழ்த்துகிறார்கள் எனவும், இதையடுத்து நாளை காலையே ஆர்டிஓ மற்றும் தாசில்தார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றத்தில் கொண்டுவருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+