சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமியின் ப்ளானே வேறயாம்! ரெடியாகும் டூர் புரோகிராம் ஷெட்யூல்! அப்ப ஓபிஎஸ் கதி..?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.

குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் அவர் அதிமுகவின் கிளை கழக நிர்வாகிகள் உட்பட அடிமட்ட தொண்டர்கள் வரை சந்தித்து பேசவுள்ளாராம்.

இதன் மூலம் கட்சியில் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளலாம் என காய் நகர்த்தும் அவருக்கு, குறுக்கே வந்து நின்று குடைச்சல் கொடுக்க ஆயத்தமாகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

எம்ஜிஆர் டூ எடப்பாடி..! அதிமுக இதுவரை சந்தித்த “தர்ம யுத்தங்கள்”! கட்சிக்கு தலைமையேற்கப் போவது யார்? எம்ஜிஆர் டூ எடப்பாடி..! அதிமுக இதுவரை சந்தித்த “தர்ம யுத்தங்கள்”! கட்சிக்கு தலைமையேற்கப் போவது யார்?

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் ஒற்றைத் தலைமை தேர்வு இருக்கும் என்பதால் இப்போதே அது தொடர்பான பரபரப்பும், பஞ்சாயத்தும் ஆரம்பாகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஒரு குழுவும், எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒரு குழுவும் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகிறது. ஓ.பி.எஸ். இல்லத்திற்கு அவரது ஆதரவாளர்கள் வரத் தொடங்கியுள்ளதால் தர்ம யுத்தத்தின் போது அங்கு என்ன மாதிரியான சூழல் இருந்ததோ அதேபோன்று ஒரு சூழல் தென்படத் தொடங்கியுள்ளது.

மிஸ்டர் கூல்

மிஸ்டர் கூல்

ஆனால் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை வழக்கம் போல் மிஸ்டர் கூலாகவே இந்த விவகாரத்தையும் டீல் செய்து வருகிறார். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றால் அந்த ஒற்றைத் தலைமை நானாக தான் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருக்கிறார். இதனிடையே அதிமுக பொதுக்குழுவை முடித்த கையோடு தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களை உள்ளடக்கியவாறு ஒரு மெகா சுற்றுப்பயணத்துக்கு எடப்பாடி பழனிசாமி ரெடியாகி வருகிறாராம்.

டூர் புரோகிராம்

டூர் புரோகிராம்

இந்த டூர் மூலம் மக்களை சந்திக்கிறாரோ இல்லையோ அதிமுகவின் அடிமட்ட தொண்டன் வரை சந்தித்து தனக்கான ஆதரவை வலிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறாராம். ஏற்கனவே இப்படியொரு சுற்றுப்பயணத்துக்கு அவர் ஆயத்தமாகிய நிலையில், ஒரு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது. இப்போது பொதுக்குழு முடிந்தவுடன் அதே சூட்டோடு சூடாக இந்த பயணத்தை இ.பி.எஸ். தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பி.எஸ். நிலை

ஓ.பி.எஸ். நிலை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரும் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கிறார்கள். இதனால் போட்டி என வந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக அமையும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நான்கைந்து பிரமுகர்களை தவிர வேறு யாரும் முன்வரவில்லை என்பதால், அதிமுகவில் அவரது கதி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

English summary
Edappadi Palaniswami plans to tour across Tamil Nadu:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X