கரூர் டூ திருப்பூர் தெற்கு தொகுதி வரை.. தமிழ்நாட்டில் அதிகம் வாக்குப்பதிவான டாப் 10 தொகுதிகள் எவை?
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பதிவான 10 தொகுதிகள் மற்றும் அதன் வாக்கு சதவிகிதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட மொத்தமாக 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குகளித்தனர். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பதிவான டாப் 10 தொகுதிகள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி கரூர் தொகுதியில் மொத்தமாக 93.40% வாக்குகளும், வீரபாண்டி தொகுதியில் 93.40% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. குளித்தலை தொகுதியில் 92.79% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குமாரபாளையம் தொகுதியில் 92.65% வாக்குகள் பதிவாகியுள்ளது. பாலக்கோடு தொகுதியில் 92.57% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
சங்ககிரி தொகுதியில் 92.53% வாக்குகளும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 92.45% வாக்குகளும், பெருந்துறை தொகுதியில் 92.47% வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் 92.28% வாக்குகளும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 9017% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை தொகுதியில் 69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
நேற்று பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடக்கவுள்ளது. இதன்பின் மொத்தமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
-
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட்












Click it and Unblock the Notifications