மாமனால் முடியாததை சாதித்த மச்சான்..ஏக குஷியில் எல்கே சுதீஷ்! ஸ்ட்ரெய்ட்டா டெல்லி தான்! என்ன நடந்தது?
சென்னை: மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் எல்கே சுதீஷ். தனது அக்கா வீட்டுக்காரரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் இருந்தபோது சாதிக்க முடியாதவை தற்போது சாதித்திருக்கிறார் என்கின்றனர். திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் முதன்முறையாக டெல்லிக்கு எம்பி ஆக செல்ல இருப்பதால் தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணி அமைவதற்கும் அவர்தான் முக்கிய காரணம் என்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் மோதல் போக்கை பல ஆண்டுகாலம் கையாண்டு வந்த டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது.
தனது கல்யாண மண்டபத்தை திமுக அரசு இடித்ததாக கோபத்தில் இருந்த விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கினார். அதற்குப் பிறகு 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல், 2018 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள், ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் தனித்தும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, திமுகவுடன் உடன் மட்டும் கூட்டணி அமைக்கவில்லை.

2026 சட்டமன்றத் தேர்தல்
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேமுதிக கூட்டணி அமையும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவின் நேரடி தலையிட்டால் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்குள் வருவார் என்று கடைசி வரை அனைவரும் நம்பினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தேமுதிக கூட்டணியில் இணைந்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். 20 தொகுதிகள் வரை பிரேமலதா கேட்டதாக சொல்லப்படும் நிலையில் ஆறு தொகுதிகளை ஒதுக்க ஒப்பு கொண்டுள்ளது திமுக.
தேமுதிக திமுக கூட்டணி
ரிஷிவந்தயம், விருத்தாச்சலம், விருதுநகர் உள்ளிட்ட சில தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. கூடுதல் போனஸ் ஆக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர திமுக முன் வந்துள்ளது. அந்த மாநிலங்களவை பதவி எல்கே சுதிஷ்க்கு வழங்கப்படும். பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும் தேமுதிகவின் பொருளாளரான எல்கே சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை குறி வைத்துதான் காய்களை நகர்த்தி வந்தார்.
எல்கே சுதீஷ்
விஜயகாந்த் இருந்தபோதும் திமுகவுடன் அவர் கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தினார். ஆனால் அது கைகூடவில்லை. விஜயகாந்த் எடுத்த முடிவுகள் தான் களத்தில் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் இல்லாத நிலையில் கட்சியை வளர்க்க வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி அமைந்திருக்கிறது என்கிறார் பிரேமலதா. ஆனால் இது முழுக்க முழுக்க எல்.கே சுதீஷின் ஏற்பாடு என்கின்றனர்.
மாநிலங்களவை வாய்ப்பு
கடந்த பல தேர்தல்களில் தேமுதிக மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் கட்சியின் அங்கீகாரம் பறிபோய் உள்ளது. வரும் தேர்தலில் குறைந்தது 8 சதவீத வாக்குகளை பெற்றால் தான் தேமுதிக அங்கீகாரமும் இழந்த முரசு சின்னமும் கிடைக்கும். தற்போது கூட தேர்தல் ஆணையம் மனசு வைத்தால் தான் முரசு சின்னம் கிடைக்கும். ஆனால் அது நடக்குமா என தெரியவில்லை. இருந்தபோதும் ஏதாவது ஒரு பொது சின்னத்தில் தேமுதிக போட்டியிடும் என்கின்றனர். எல்லாவற்றையும் விட தொண்டர்களை விட எல் கே சதீஷ் தான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் என்கின்றனர்.
மாநிலங்களவை எம்பி தேர்தல்
கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்த போது மாநிலங்களவை எம்பி, மத்திய இணை அமைச்சர் பதவி என எல்.கே சுதீஷ் ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு வழங்க அதே கோரிக்கை தான் முன்வைக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை டெல்லிக்கு சென்று விட வேண்டும் என்பதுதான் எல்கே சுதீஷின் எண்ணம். அதை வைத்து திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் சட்டசபைக்கு செல்கிறார்களோ இல்லையோ மார்ச் 16 நடக்கும் மாநிலங்களவை எம்பி தேர்தல் மூலம் நிச்சயம் தான் டெல்லிக்கு சென்று விடலாம் என உற்சாகத்தில் இருக்கிறாராம்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது?











Click it and Unblock the Notifications