இராமா, இராமா.. இவ்வளவு பெரிய தொகையா? இன்னும் ஓராண்டு கணக்கு வருதாமே.. பாஜகவை சீண்டும் மனோ தங்கராஜ்
சென்னை: தேர்தல் பத்திர நன்கொடையாக அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளவங்க தான் அதிகம் கொடுத்திருக்கிறார்கள் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்பாஜகவை விமர்சித்துள்ளார். நேற்று மாலை தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்களை பொதுவெளியில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திர விவரங்களை நேற்று மாலை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டது. இதில், தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு அதிகம்: எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகையை வாங்கியிருக்கின்றன போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் படி பார்த்தால், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பாஜகவிற்கே சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 11,562.5 கோடி ரூபாய் நிதியில் 6,566 கோடி ரூபாயை பாஜக நிதியாக பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.
இதில், அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த டாப் 10 நிறுவனங்களில், 'லாட்டரி' மார்டினின் நிறுவனம் ₹1,368 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. 'லாட்டரி கிங்' என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங், ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ₹1,368 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
மனோ தங்கராஜ் விமர்சனம்: இதற்கு அடுத்தபடியாக மேகா என்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்டர்க்சர்ஸ் லிமிடெட் ரூ. 966 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதேபோல் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் ஈ டி விசாரணையில் உள்ளவங்க தான் அதிகம் கொடுத்திருக்கிறார்கள் என்று பாஜகை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மனோ தங்கராஜ் கூறியதாவது:-
இவ்வளவு பெரிய தொகையா? இராமா, இராமா.
இன்னும் ஓராண்டு கணக்கு வருதாமே!!
ஈ டி விசாரணையில் உள்ளவங்க தான் அதிகம் கொடுத்திருக்கிறார்களாம்.
இதுதான் பிரதமர் மோடியின் தேசபற்றா? அப்போ இராமராச்சியம் ஏழைகளை ஏமாற்றும் வெற்று முழக்கம் தானா? . இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவிற்கு 46.74 சதவிகிதம்: தேர்தல் ஆணையம், நேற்று மாலை தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்த தேர்தல் பத்திரங்களில் 46.74 சதவிகிதம் பாஜகவிற்கு சென்றுள்ளது. இதேபோல், 1093 கோடி ரூபாய் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நிதியாக சென்றுள்ளது.
'லாட்டரி' மார்டினின் நிறுவனம் ₹1,368 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. 'லாட்டரி கிங்' என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங், ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ₹1,368 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications