தாம்பரம்-கடற்கரை இடையே இன்று முதல் மின்சார ரயில்கள் ரத்து.. சிறப்பு ரயில்கள் நேர அட்டவணை இதுதான்
சென்னை: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை பகலிலும் பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில் பயணிகள் இந்த அட்டவணை படி பயணத்தை திட்டமிடலாம்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் பராமாிப்பு பணி மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில், கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதேநேரம் தெற்கு ரயில்வே நேற்று (1-ம் தேதி) வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம் இருப்பதாகவும், கூடுதலாக சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது..
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: அதநேரம் ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படும்.
இதேபோல் பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். அதேநேரம் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் கிடையாது
இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரயிலும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான ரயில்களை போல அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும்.
இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் மின்சார ரயிலாக இயக்கப்பட உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கூடுவாஞ்சேரி-பல்லாவரம் இடையே இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications