மின்கட்டண உயர்வு.. குலுங்கும் தலைநகர்.. சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று சென்னையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Recommended Video
தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயத்தால் தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டுள்ளதாக ஆளும் திமுக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் உயர்த்தப்பட்ட வரி, கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் தமிழக அரசு அதனை பரிசீலனை செய்யவில்லை.

அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்தது. இதுதொடர்பாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் ஜூலை 25ல் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
ஆனால் ஜூலை 25ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்க உள்ளார்.

கோஷமிட்ட அதிமுகவினர்
இன்று காலை 11 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் ஆர்ப்பாட்டம் இதுவாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷமிடப்பட்டது. மேலும், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளை சேர்ந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications