சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட சூப்பர் கண்டிஷன்! உஷாரான மின் வாரிய அதிகாரிகள்! பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ஊரெங்கும் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அழைத்து தடையின்றி மின் இணைப்பு வழங்குவது பற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி பாடம் நடத்தியிருக்கிறார்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மின் வாரிய அதிகாரிகளுக்கு கறாராக பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு உயர் அதிகாரியின் செயல்பாடுகள் பற்றிய தரவுகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நம்மை பற்றி அமைச்சர் குறிப்பிடுவாரோ என மிகவும் உஷாராக அமர்ந்திருந்தார்கள்.

 கள்ளக்குறிச்சி நகைக்கடை கொள்ளை: ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் - புனேவைச் சேர்ந்த 3 பேர் கைது! கள்ளக்குறிச்சி நகைக்கடை கொள்ளை: ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் - புனேவைச் சேர்ந்த 3 பேர் கைது!

அமைச்சர் அறிவுறுத்தல்

அமைச்சர் அறிவுறுத்தல்

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறும், தேவையான JCB வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து பாதுகாப்பான முறையில் மின் கட்டமைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ரெடியாக இருக்கணும்

ரெடியாக இருக்கணும்

மேலும் மின் வாரிய வாகனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன் மின் வாரிய அதிகாரிகள் இயற்கை இடர்பாடுகளின் போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் ஐடியா வழங்கினார். மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து அலுவலகர்களுக்கும் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் டேட்டா

அதிகாரிகள் டேட்டா

ஒவ்வொரு உயர் அதிகாரியின் செயல்பாடுகள் பற்றிய தரவுகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுக்கூட்டத்தில் பேசியதால், எங்கே நம்மை நோக்கி கேள்வி எழுமோ என்ற பதைபதைப்புடன் பலரும் அமர்ந்திருந்தனர். இதனிடையே அமைச்சர் எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்கும் வகையில் ஒரு சிலர் மட்டும் உஷாராக முன் கூட்டியே சில முன் தயாரிப்புகளுடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

1,40,000 மின் கம்பங்கள் தயார்

1,40,000 மின் கம்பங்கள் தயார்

இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து மழை பெய்தாலும் பாதிப்பின்றி சீரான மின் விநியோகத்திற்காக ஏறத்தாழ 1,40,000 மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மின்கம்பிகளை பொறுத்தவரை 9,500 கிலோ மீட்டர் மின்கம்பிகள் தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

English summary
Minister Senthil Balaji has called the Higher officers of the Electricity Board and conducted a lesson on providing uninterrupted electricity connection in the context of heavy rains in tamil nadu. He has issued an order to the Electricity Board officials to provide electricity to hospitals and drinking water connections on a priority basis in case of disconnection of power supply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X