3 வருஷத்துக்கு பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது! இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க! EPFO கொடுத்த வார்னிங்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம்கள் மூலமே எடுத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் உரிய காரணங்களின்றி தேவை இல்லாமல் பணத்தை எடுத்தால் அபராதம் செலுத்தப்படும் என இபிஎப்ஓ எச்சரித்துள்ளது.
இபிஎஃப்ஓ என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறது. மேலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் செலுத்துகின்றன.
இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும் இபிஎஃப்ஓ பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

பி.எஃப் பணம்
தற்போது நெட் பேங்கிங் மூலமாக தான் பணத்தை எடுக்க முடியும். அதாவது தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்கை இணைத்து, அதன் மூலம் அப்ளை செய்தால் மிகப்பெரிய பிராசஸ்க்கு பிறகு அந்த பணம் தங்கள் வங்கி கணக்குக்கு வரும். அதற்கு 10 முதல் சில மாதங்கள் வரை கூட ஆகலாம். இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை தந்திருக்கிறது மத்திய அரசு. இனி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் தொழிலாளர்கள் தங்கள் வைப்பு நிதியை யூபிஐ மற்றும் ஏடிஎம்கள் மூலமே எடுத்துக் கொள்ள முடியும். தற்போது இதற்கான நடைமுறைகள் தொடங்கி இருக்கும் நிலையில் தொழிலாளர்கள் பயன்பாட்டுக்காக இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிரமம் இன்றி உடனடியாக தேவைப்படும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள முடியும்.
தவறான பயன்பாடு அபராதம்
அதே நேரத்தில் உரிய காரணங்களின்றி தேவை இல்லாமல் பணத்தை எடுத்தால் அபராதம் செலுத்தப்படும் என இபிஎப்ஓ எச்சரித்துள்ளது. பிஎஃப் கணக்கில் தங்கள் பணத்தை அவசர தேவைக்கு மட்டுமே எடுக்க முடியும் உதாரணத்திற்காக வீடு கட்டுவது, மருத்துவச் செலவு, கல்வி, திருமணம் போன்ற அத்யாவசிய அல்லது அவசர செலவுக்காக எடுத்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் மேற்கண்ட காரணங்களை கூறி வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் போது அது விதிமீறல் ஆகும்.
பி.எஃப் சட்டம்
உதாரணத்திற்கு வீடு கட்ட பணம் எடுப்பதாக கூறி அதனைப் பொழுதுபோக்கு அல்லது வேறு தேவைக்காக பயன்படுத்தினால் அதனை தவறான பயன்பாடாக கருதி இபிஎப்ஓ அந்த தொகையை திரும்பப் பெறுவதோடு அபராதமும் விதிக்கும். தற்போதைய சூழலில் இரண்டு காரணங்களுக்காக பணத்தை முழுமையாக எடுக்கலாம். ஒன்று குறிப்பிட்ட வயதை அடைந்ததும் ஓய்வு பெறுவது அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால் முழுமையாக பணம் எடுக்கலாம்.
இபிஎஃப்ஓ எச்சரிக்கை
மேலும் வீடு வாங்குதல் புதுப்பித்தல், கடன்களை செலுத்துதல், அவசர மருத்துவ தேவை, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்காக பகுதி அளவு பணத்தை எடுக்கலாம். இந்த பணத்தை எடுக்கும்போது எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஆனால் பணத்தை எடுத்த பிறகு அது எந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை epfo ஆராய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை தவறாக பயன்படுத்துவதை நிறுவிக்கப்பட்டால் அந்த தொகையை அபராதத்துடன் இபிஎப்ஓ வசூலிக்கும்.
பி.எஃப். திட்டம்
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பணம் எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உண்மையான காரணங்களுக்கு மட்டுமே அந்த பணத்தை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஃப்ஓ "தவறான காரணங்களுக்காக பி.எஃப். பணத்தை எடுப்பது, 1952-ஆம் ஆண்டு பி.எஃப். திட்டத்தின் கீழ் பணத்தை மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பி.எஃப். பணத்தை சரியான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் பி.எஃப். உங்கள் வாழ்நாள் பாதுகாப்பு கவசம்!" என்று கூறியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications