லட்டு போல் கிடைத்த தீர்ப்பு.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாகிறாரா இபிஎஸ்!
சென்னை: அதிமுகவின் சட்டவிதிகளை திருத்த தடை ஏதும் உயர் நீதிமன்றம் விதிக்காததால் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருக்கிறது.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை. இதுகுறித்து பொதுக் குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது. அது போல் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளக் கூடாது என வாதிட்டார்.

23 தீர்மானங்கள்
மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. ஆனால் இதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், பொதுக் குழுவில என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எதுவும் நடக்கும் நடக்காது என உத்தரவாதம் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

அதிமுக பொதுக் குழு
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக பொதுக் குழு குறித்து ஓபிஎஸ் தரப்பும் ஈபிஎஸ் தரப்பும் தங்கள் காரசாரமான வாதங்களை முன் வைத்தன. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு நடத்த தடை விதிக்க முடியாது என ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் சட்டவிதிகளை திருத்த தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தடை விதிக்க முடியாது
அது போல் பொதுக் குழு தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால தடையும் பிறப்பிக்க முடியாது. பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். அதாவது ஓபிஎஸ் தரப்பு முன் வைத்த எந்த ஒரு விஷயத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இது ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஒற்றைத் தலைமை
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சியில் உள்ளது. விதிகளை திருத்த தடையில்லை என்பதால் நாளை ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. எனவே எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியிலும் ஆட்சியிலும் தலைவராவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications