Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய பன்னீர்செல்வமாய்..எடப்பாடிக்கு பக்கத்திலேயே ஓபிஎஸ்! ராயப்பேட்டையில் கடுகடுத்த இபிஎஸ்! என்னவாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தவிர்த்து தற்போது மற்றொரு விவகாரமும் எடப்பாடி பழனிச்சாமியை தூங்க விடாமல் செய்திருக்கிறது. அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராய் தனது அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்த நிலையில் அது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ் முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் ஆட்சியில் இருந்ததைப் போல, தற்போது அதனை ஓரளவு சமாளித்தும் வந்திருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சி நடந்தபோது சந்திக்காத பிரச்சனையையா தற்போது சந்தித்து விட்டோம் என்ற ரீதியில் எப்படியாவது இந்த விவகாரத்திலும் வெற்றி பெற்று அதிமுக தலைமையாக வேண்டும் என்பதை அவரது எண்ணமாக இருக்கிறது.

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

தற்போது அதிமுக வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இறுதி வாதத்தை முன்வைக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு தான் சாதகமாக வரும் என இரு தரப்புமே நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க ஆண்டின் தொடக்கமே எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிருப்தியோடு தான் தொடங்கி இருக்கிறது.

அருகே ஓ.பன்னீர்செல்வம்

அருகே ஓ.பன்னீர்செல்வம்

இன்று நடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபைக்கு வந்தார். அப்போது அவரது சொந்த கட்சி அரசியல் எதிரியான ஓ.பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அவரது அருகிலேயே அமர்ந்தார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக மோதல் வெளிநடப்பு என எடப்பாடி தரப்பு கூட்டத் தொடரை புறக்கணித்த நிலையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரைக்காக வேறு வழியின்றி அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எம்எல்ஏக்கள் கூட்டம்

எம்எல்ஏக்கள் கூட்டம்

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கரூர் உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் பெண் காவலர் மீது திமுகவினரின் அத்துமீறல் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளை எம்எல்ஏக்கள் எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

குறிப்பாக தங்கள் தரப்பில் ஆர்பி உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொள்ளாத நிலையில் அது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மீண்டும் சபாநாயகரை சந்தித்து முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் சபாநாயகர் இது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை என்றால் சட்டசபை நிகழ்வுகளை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன.

எடப்பாடி குழப்பம்

எடப்பாடி குழப்பம்

அதே நேரத்தில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை உட்கட்சி விவகாரங்களை காரணம் காட்டி புறக்கணித்தால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அவப்பெயர் ஏற்படும் எனவும் எப்படியாவது இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்திலேயே கூட்டத்தை முடித்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+