எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் பண்ணதே அவர்தான்.. ஓபிஎஸ்ஸை கவிழ்க்க ஒருத்தர் போதும்.. மாஜி அட்டாக்!
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று எம்ஜிஆரின் கட்சியை காப்பாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வத்தோடு ஒன்றிணைந்துள்ளோம் என்று சொல்கிறார், ஓபிஎஸ்ஸை கவிழ்க்க அவர் ஒருவரே போதும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ், பண்ருட்டியார், என பலரும் எடப்பாடி தரப்பை விளாசித் தள்ளினர்.
இந்நிலையில், எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது ஓபிஎஸ்ஸோடு சேர்ந்திருக்கிறார் என விமர்சித்துப் பேசியுள்ளார்.

ஓபிஎஸ் vs எடப்பாடி
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகாரமாக வெடித்த நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக இரு தரப்பினரும் கட்சிக்கு உரிமை கோரி நீதிமன்றத்தை மாறி மாறி நாடி வந்தனர். பொதுக்குழு தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அடுத்தகட்டமாக வரும் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

மா.செக்கள் கூட்டம்
பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினார். ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கினார். இந்நிலையில், எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நேற்று நடத்தினார்.

அரசியல்வாதிக்கு நம்பகத்தன்மை முக்கியம்
இக்கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர்செல்வம்தான் என்றும், அவரிடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை, அரசியல்வாதிக்கு நம்பகத்தன்மை அவசியம். ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நம்பியது போல் மக்கள் நம்பலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை வழிநடத்த தகுதியானவர் ஓ.பன்னீர்செல்வம் தான் எனப் பேசினார்.

எடப்பாடியை விளாசிய பண்ருட்டி
எம்ஜிஆருக்கு எதிராக திமுகவில் பொதுக்குழு நடந்தபோது, எம்ஜிஆர் முகத்தில் திராவகம் வீசி விடுவார்கள் என்று நாங்கள் கூறியதால் எம்ஜிஅர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. ஆனால், ஓபிஎஸ், தைரியமாக ஈபிஎஸ் தரப்பு கூட்டிய பொதுக்குழுவிற்குச் சென்றார். என்ன இருந்தாலும் மறவர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஓபிஎஸ். அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் தங்களை அதிமுக தொண்டர்கள் என்று சொல்வார்கள். தொண்டர்கள் தான் தனது அரசியல் வாரிசு என்றார் எம்ஜிஆர். எனவே தொண்டர்கள் தான் தலைமையை அங்கீகரிப்பார்கள் எனப் பேசினார். மேலும் எடப்பாடி பழனிசாமி தற்குறி என்றும் விமர்சித்தார்.

ஈபிஎஸ் அணி மாஜி
இந்நிலையில், ஈபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் காமராஜ், பண்ருட்டி ராமச்சந்திரனை விமர்சித்துள்ளார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு ஆகியற்றிற்கு எதிராக திமுக கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர அதிமுக சார்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவர் ஒருவர் போதும்
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கனவே பாமகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்று அங்கும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போதெல்லாம் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இவருக்கு தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்த அவர், இன்றைக்கு எம்ஜிஆரின் கட்சியை காப்பாற்றுவதற்காக ஓபிஎஸ்ஸிடம் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று சொல்கிறார். இவர் ஒருவரே ஓபிஎஸ் அணியை கவிழ்ப்பதற்கு போதும்" என விமர்சித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications