டார்கெட் எடப்பாடி.. இரட்டை இலை விவகாரத்தை கையிலெடுத்த செங்கோட்டையன்.. தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுகவில் இருந்து முக்கிய தலைவரான செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்தார். இதனால் செங்கோட்டையன் மனவேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதே எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. இதனால் செங்கோட்டையனின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏற்கனவே செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.
இதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையான அதிமுக அல்ல.. அதிமுக கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் கடிதம் மீது தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த செங்கோட்டையன் கோரி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு இரட்டை இலை விவகாரத்தில் பல்வேறு குடைச்சல் கொடுத்து வரும் சூழலில், செங்கோட்டையனும் இணைந்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications