ஈர்க்கும் ஈரோடு.. குவியல் குவியலா குவிஞ்சிடுச்சு.. ஈரோட்டு பஜாரில் காலையிலயே திரண்ட ஜனம்.. என்னவாம்
சென்னை: குவியல் குவியலாக ஈரோடு நகர வீதிகளில் துணிகள் விற்பனையாகி வருகின்றன.. இதனால், பஜார் பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறதாம்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாகவே, தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதுமுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி உதவி புரிந்து வருகிறது.

கோ ஆப் டெக்ஸ்: அதேபோல, தன்னுடைய வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அப்படித்தான் இந்த தீபாவளி பண்டிகையின்போதும் தள்ளுபடியை அறிவித்து அதிர வைத்தது.
இதுபோல, பல்வேறு ஜவுளிக்கடைகளும், ரெடிமேடு கடைகளிலும், தீபாவளி தள்ளுபடி ஆஃபர்கள் குறித்த அறிவிப்புகள் பொதுமக்களை கவர்ந்திருந்தன. இதில், ஈரோடு மாநகரத்தில் ஏகப்பட்ட தள்ளுபடி அறிவிப்புகள், கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே வெளியாக துவங்கிவிட்டன.
ஜவுளி கடைகள்: இதனால், தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க, ஈரோடு மாநகர பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.. ரோட்டோரத்திலும், வியாபாரிகள் நிறைய கடைகளை அமைத்திருந்தனர்.. செருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மலிவு விலையில் ஆஃபர் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டதால், ஈரோட்டில் மக்கள் கூட்டம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அசத்தல் ஆஃபர்: ஆனால் நேற்றும்கூட, ஆர்கேவி சாலையில் உள்ள சில ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம், நெரிசலாக காணப்பட்டது.. அங்குள்ள சில ஜவுளி கடைகளில், காலையிலிருந்தே மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள்.. இதன்காரணமாக, நேற்றைய தினமும் மலிவு விலையில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன.
அதாவது 5 சர்ட் ரூ.1,000, 3 பேன்ட் ரூ.1,000 என கடைகளில் விற்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலையிலிருந்தே, தள்ளுபடி விலையில் ஜவுளிகளை வாங்க மக்கள் கால் கடுக்க காத்திருக்க துவங்கினார்கள்.. கடைகள் திறக்கப்பட்டதுமே, போட்டி போட்டுக்கொண்டு, துணிகளை வாங்கி சென்றுள்ளனர்..

டிராபிக் ஜாம்: இதன்காரணமாக, கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ஜவுளிகடைகள் மட்டுமல்லாமல், சாலையோர கடைகளிலும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட செருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் திரண்டு வந்தனர்..
தீபாவளியையொட்டி "ஸ்டாக் கிளியரன்ஸ்" செய்வதற்காக சில கடைக்காரர்கள், இதுபோல மலிவு விலையில் ஜவுளிகளை விற்பனை செய்வார்களாம். அந்த "ஸ்டாக் கிளியரன்ஸ்"தான், ஈரோட்டு மாநகரத்தில் தற்போது பிஸியாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications