வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம்! கூடுதலாக 2 நாட்கள் ஒதுக்குக -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் மாறுதல் போன்ற பணிகளுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கிராம பகுதிகளில் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாக ஏற்படவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

வரலாறு காணாத மழை
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு வாரமாக கன மழை முதல் மிக கன மழை வரை பொழிந்துள்ளது. இதில் ஒரு சில மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது. மழை வெள்ளத்தில் இருந்து அரசின் துரித நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் மீண்டு வருகின்றனர். அதிகமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண முகாம்களிலும் தங்கி உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்
இதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாக ஏற்படவில்லை. இந்த சூழலில் தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் மாறுதல் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம்கள் நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது.

கூடுதலாக 2 நாட்கள்
மேலும் இந்த மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் மீண்டும் நடைபெற உள்ளது. மேற்படி மழை பொழிவின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் பங்கேற்க முடியவில்லை. எனவே மேன்மைமிகு தமிழக தேர்தல் ஆணையம் வரலாறு காணாத மழை பொழிவு மற்றும் மக்களுடைய தற்காலிக இன்னல்கள் மற்றும் பருவ கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேறு இரண்டு நாட்களில் மீண்டும் தமிழக முழுக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் இடம் மாறுதல் பணிகளுக்கு சிறப்பு முகாம் அமைத்தும் பொதுமக்களுக்கு ஓர் நல்வாய்ப்பு வழங்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வாக்கு சாவடிகள் மூலமாக இன்னும் அதிகமான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் ஆணையம்
இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் 26 மற்றும் 27 தேதிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக மேலும் இரண்டு நாட்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்காக ஒதுக்க வேண்டும். கனமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு இது உதவியாக இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications