யோகா டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. டி-ஷர்ட், பேண்ட்டை பிடித்து இழுத்து.. சென்னையில் அக்கப்போர்!
சென்னையில் யோகா டீச்சருக்கு பாலியல் தொல்லை தந்த நபர்களை தேடி வருகிறார்கள்
சென்னை: யோகா டீச்சரின் டி-ஷர்ட்டையும், பேண்ட்டையும் பிடித்து இழுத்துள்ளனர் 2 ரோமியோக்கள்.. இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடுரோட்டில் நடந்துள்ளது.
சென்னை நெல்சன்மாணிக்கம் ரோட்டில் இருந்து அண்ணாநகரை நோக்கி யோகா டீச்சர் ஒருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். யோகா பயிற்சியை முடித்துவிட்டு, டி-ஷர்ட், பேண்ட் அணிந்துதான் பைக்கை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது 2 இளைஞர்கள் ஒரு பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.. 2 பேருமே கஞ்சா அடித்திருந்ததாக கூறப்படுகிறது.. அதை பார்த்து பதறிய டீச்சர், முந்தி செல்ல, வேகமாக டூவீலரை ஓட்டி உள்ளார்.. ஆனால், அந்த இரு இளைஞர்களும் டீச்சரின் பைக்கை கடந்து, அவரது டி-ஷர், பேண்ட்டை இழுத்து ஈவ்டீசிங் செய்துள்ளனர்.
பிறகு அவரது ஹேண்ட் பேக்கையும் பிடித்து இழுத்துள்ளனர்.. இதனால் பயந்துபோன டீச்சர், டூவீலரின் வேகத்தை குறைத்துள்ளார்.. அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட 2 போதை இளைஞர்களும், தங்களுடைய பைக்கை டூவீலருக்கு குறுக்கே நிறுத்திவிட்டு, மறுபடியும் டீச்சரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.. பிறகு அங்கிருந்து தப்பி பைக்கில் பறந்துவிட்டனர்.
இதனால் அதிர்ந்து போன டீச்சர், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தபோது, அங்கு பாஜக போராட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரிடம் விஷயத்தை சொல்லி, புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில், தற்போது விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. அந்த இளைஞர்கள் யார் என்று தெரியவில்லை.. அதனால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறார்கள் போலீசார்!
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications